பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஆதித்த கரிகாலன் கெட்டப் லீக்.. சீயான் மிரட்டல். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Ponnniyin selvan vikram getup leaked

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் உங்களால் வேறு எந்த நடிகரையாவது கற்பனை செய்து பார்க்க முடிகிறது. வாய்ப்பே இல்லை, சீயான் விக்ரம் தவிர யார் நடித்திருந்தாலும் நன்றாக இருந்திருக்காது. மற்ற எல்லா கதாபாத்திரத்திற்கும் மணிரத்னம் கிட்ட சாய்ஸ் இருந்தது, ஆனால் இந்த மணிரத்னம் எப்போது பொன்னியின் செல்வன் படம் எடுக்கலாம் என்று நினைத்தாரோ அப்போது முதல் ஆதித்த கரிகாலன் விக்ரம் தான்.

பொன்னியின் செல்வன் படத்தில் “சோழா சோழா” பாடலில் வரும் சில வரிகள் ஆதித்த கரிகாலனின் குணங்களை தவறாக சித்தரித்து உள்ளது. வரலாறு கூறும் ஆதித்த கரிகாலன் யார்? அவரின் குணங்கள் என்ன? தமிழர்கள் இது போன்ற விடயங்களை எவ்வாறு அணுக வேண்டும்? என்பதற்கு பதில் இரண்டாம் பாகத்தில் இயக்குனர் மணிரத்னம் கொடுப்பாரா என்று ஏற்கனவே பல விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

Ponnniyin selvan vikram getup leaked

தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் லுக் டெஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் பார்ப்பதற்கு சும்மா மிரட்டுகிறார். போர்க்களத்தில் ஏற்பட்ட காயங்களுடன் காட்சியளிக்கிறார். அதீத கரிகாலனை மணிரத்னம் இரண்டாம் பாகத்தில் கொன்று விடுவாரோ என்ற கேள்வி இருக்கிறது. கொஞ்சம் பாண்டஸியை கலந்து தான் இந்த படத்தை எடுத்துள்ளார், அதனால் ஆதித்த கரிகாலனை கொல்வாரா இல்லை கதையை மாற்றி விடுவாரா மக்களுக்காக என்று கேள்விகள் உள்ளன.

ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், அ.மொ.வர்மன்‌ மூணு பேரும் சேர்ந்து வர்ற மாதிரி புக்ல வராதே.. ஒரு வேலை ‌மணிரத்னம் கற்பனையா ‌இருக்குமோ என்றால் கல்கியின் பொன்னியின் செல்வனே கொஞ்சம் கற்பனை தான். ஆனால் உண்மையான கதைப்படி எல்லாரும் சொல்வது என்னவென்றால் “பேராற்றல் கொண்ட ஆதித்த கரிகாலனை சூழ்ச்சி செய்து, படுகொலை செய்த பார்ப்பனர்கள்” என்று தான். இது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.

Related Posts

View all