மாடர்ன் ட்ரேஸ்ல கலக்குறீங்க! வெளிநாட்டில் ஜாலி பண்ணும் பூஜா ஹெக்டே வின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்!
பூஜா ஹெக்டே வின் லேட்டஸ்ட் ஷூட் பிக்ஸ்! நடிகை பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதன்பிறகு அவருக்கு தெலுங்கு திரையுலகில் வாய்ப்புகள் வந்தது. பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்து தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.
மீண்டும் தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர். விஜய் கதாநாயகனாக நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். தற்போது SIIMA அவார்ட்ஸில் சவுத் இந்தியன் யூத் ஐகான் என்ற விருதையும் வாங்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பாத்ரோப் உடையுடன் ஜன்னலருகில் அமர்ந்து அமைதியாக புத்தகம் படிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுருந்தார்.
அந்த புகைப்படம் ஹாட் டாபிக் ஆகியிருக்கும் வேலையில் தற்போது மாஸா ஈவென்ட்டிற்காக டிரெஸ் அப் செய்து கொண்ட வீடியோ காட்சிகளை வெளியிட்டிருக்கிறார். அதில் பார்பி டாலைப் போலவே கியூட்டாக இருக்கிறார். அந்த வீடியோ தற்போது டிரெண்டிங்கில் உலா வருகிறது.
சமீபத்தில் “கடல், கடற்கரை மண், கடல் உணவுகள்” என அனைத்தயும் மிஸ் செய்து வருவதாக கூறி பிகினியில் உணவு உண்பது போல புகைப்படம் ஒன்றை பதிவேற்றியிருக்கிறார். எது எப்படியோ அவர் சில விஷயங்களை மிஸ் செய்தாலும் ரசிகர்கள் அவரை மிஸ் செய்யாது இருக்க ஹாட் பிகினி போட்டோக்களை இறக்கி கல்லா கட்டி விடுகிறார்.
சமீபத்தில் ஷுட்டிங்கில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே வின் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கெஷுவலான உடையிலும் கிளாஸா உள்ளார் பூஜா. பிறகு ரசிகர்களுக்கு சொல்லவா வேண்டும்.