ஆகா.. பூங்குழலி.. அலைகடலும் ஒய்ந்திருக்க அகக் காதல்தான் பொங்குவதென்.. பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இந்த பாடலின் வரிகள் தனிமையில் மனதிற்கு இனிமை தரும் பாடல். சில பாடல்கள் மட்டுமே காட்சி நடக்கும் இடத்தில் நாம் இருப்பது போல உணரவைக்கும் அது போன்ற ஒரு பாடல் இது.
இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும். அப்பொழுது தான் நம் தமிழ் மொழியை ரசித்து கொண்டே இருக்க முடியும் ஏனெனில் ரசிக்க காலங்கள் போதாது. இந்த பாடலை கேட்கையில் 5 நிமிடங்கள் சமுத்திர குமாரியுடன் பயணித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. ARR இசை என்றால் சும்மாவா. அவருடைய பேஸ்டை ஒவ்வொரு முறையும் கொடுத்து கொண்டே இருக்கிறார். அதனால் தான் அவர் இன்று நம்பர் 1 இசையமைப்பாளர்.
என்ன ஒரே குறை, கல்கி அவர்கள் எழுதிய அவரின் சொந்த வரிகளான,
“அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்? நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?”
இந்த பாடலுக்கு உபயோகப் படுத்தியிருக்கலாம். ஏனென்றால் பொன்னியின் செல்வன் வாசகர்களுக்கு ‘பூங்குழலி’ என்றாலே இந்த வரிகள்தான் மனதில் தோன்றும் என்பதில் சந்தேகமில்லை. மற்றபடி பூங்குழலியின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப அவளின் ஒரு தலை காதல், ஏக்கம், சோகம், தனிமை என அனைத்தையும் அப்படியே பிரதிபலிக்கிறது இந்த பாடல்.
காலைத்தை வென்ற பாடல்களின் வரிசையில் இந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் படத்தின் பாடல்களும் இடம் பெறும் அவ்வளவு அழகான மனதை வருடும் பாடல்கள் அனைத்தும். எங்களுக்கு பொன்னி நதி எல்லாம் இன்றும் repeat mode தான்.
Video: