ராட்சசன்க்கு அப்பரம் தமிழ்ல தரமான investigation மர்டர் mystery thriller.. தரமான சம்பவம்.. முழு விவரம்.
முதல் பாதி எப்பவும் போல கொலை துப்புதுலக்குரதுனு நகர்ந்தாலும்.. ரெண்டாவது பாதில உனக்கு காட்டுரேன் பாரு ஒரு படம் இன்னைக்குனு டைரக்ட்டர் இறங்கி செஞ்ச சம்பவம்தான் ‘போர் தொழில்’ படத்துல ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பன்னாம தரமான திரைக்கதை அமைச்சி சீட் எட்ஜ்ல உக்கார வெச்சிருக்காங்க…
வழக்கமான தொடர் கொலைகளை செய்யும் சைக்கோ கொலையாளியை தேடுற கதைன்னாலும் அதுல சின்ன சின்ன டீடெயிலிங், விறுவிறுப்பான திரைக்கதைனு ஒரு அறிமுக இயக்குனர் & சின்ன டீம்கிட்ட இருந்து வந்திருக்க நல்ல த்ரில்லர் தான் இந்த போர் தொழில்.
தன் அனுபவத்தை வச்சு ஒரு வழக்குல கொலையாளியை கண்டுபுடிக்க நியமிக்கப்படுற அதிகாரி.. அவருக்கு துணையா அனுபவமே இல்லாம படித்த புத்தக அறிவை வச்சிக்கிட்டு வர்ற காவல்துறைக்கு புதுவரவுனு ஒரு வித்தியாச காம்போ. அவங்க ஓர் வித்தியாச கொலை கேஸை கண்டுபிடிக்கிற ஒன்லைன்
படத்துல ஹீரோவே சரத்குமார் தான். ஒரு சீனியர் ஹீரோ ‘கேரக்டர் ரோல்ல’ நடிக்க வந்தா இது மாதிரி ரோல்ஸ் தேர்ந்தெடுத்து நடிக்கணும்ங்கிற அளவுக்கு நல்ல ரோல். அவரும் சிறப்பா பண்ணி இருக்கார் . இதே மாதிரி தொடர்ச்சியா 4-5 படம் பண்ணிட்டு அதே சமயம் பப்ளிக்ல ட்ரோல் கன்டென்ட் பேச்சை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டா இன்னும் பல வருஷத்துக்கு நாட்டாமையை கொண்டாடலாம்.
அசோக் செல்வன்- தீரன்ல பார்த்த மாதிரி போஸ்டிங்ல வந்த உடனே பரபரக்குற போலீசும் உண்டு.. கொஞ்சம் ரியாலிட்டி பக்கம் போனா பயத்தை உள்ள வச்சுக்கிட்டு பம்முற போலீசும் உண்டுனு இந்த கேரக்டர் மூலமா நல்லா பண்ணி இருக்கார்.
இந்த 2 பேர் தவிர மத்த கேரக்டர்ஸ் மனசுல நிக்கல.. “கென்னடி கேரக்டர்” பெரிய சர்ப்ரைஸ்.
திருச்சில கதைக்களம்னு எடுத்த டைரக்டர் எந்தந்த ஏரியா எவ்ளோ தூரம், தியேட்டர் பேர், மறைவான காட்டுப்பகுதிகள்னு சின்ன சின்ன டீடெயிலிங்ம் செம.
BGM- நல்லா இருந்திச்சு.. ஆனா சில இடங்கள்ல டயலாக்ஸ் புரியாத அளவுக்கு ஓவர்டோஸ் ஆகிடுச்சு🙄😷 ( படத்துலயே பிரச்சனையா இல்லை நாங்க பார்த்த தியேட்டர்ல பிரச்சனையான்னு தெரியல.
நெகட்டிவ்ஸ்னு பார்த்தா இது மாதிரி த்ரில்லர் படங்கள்ல ஹீரோயின் எதுக்கு இருப்பாங்களோ அதே டெம்பிளேட்லேயே இதுலயும்.. வில்லனுக்கும் அதே கொஞ்சம் ‘பரிதாப நியாயங்கள்னு " இருக்கு.. ஆனா அதையும் சரத்குமார் டயலாக் மூலமாவும் அதுக்கு அசோக் செல்வன் பதில் டயலாக் சொல்ற மாதிரியும் வச்சு க்ளியர் பண்ணிட்டாங்க.
படத்துல ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா - படத்துல ஒரு இடத்துல என்ன படம் பார்த்துட்டு வரீங்கனு ஒரு விசாரணை வரும். அந்த படத்துல என்ன வித்தியாசம்னு கேள்வி.. அதுக்கு ஒரு பதில் வரும்.. அந்த பதில் தான் இந்த “போர் தொழில்” படத்துக்கும்னு அப்பயே டைரக்டர் செமயா சொல்லிட்டார்.
And சைக்கோ கொலையாளி படம் ஆனா பேமிலியோட பார்க்கலாம்ங்கிற அளவுக்கு நீட்டா Present பண்ணி இருக்காங்க.
மொத்தத்துல எங்கயும் போர் அடிக்காத சில சில சின்ன விஷயங்களை புதுசா சொல்ற படம். த்ரில்லர் ஜானர் விரும்பிகளுக்கான படம் . தாராளமா பார்க்கலாம்.
Rating: 4/5