மன்னிப்பு கேட்ட சரத் குமார்.. போர்த்தொழில் பட வெற்றிவிழாவில் நடந்த சம்பவம்.. வீடியோ வைரல்.
![Por tholil success meet video](/images/2023/07/02/por-tholil-team-video-viral-1-.jpg)
நிறைய இயக்குனர்கள் ஏன் சுந்தர் சி கூட சமீபத்தில் புலம்பியது என்னவென்றால், கூட்டம் வராமல் ரத்தக்கது சினிமா காட்சிகள் என்று வருத்தப்பட்டார். அவர் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், போர் தொழில் படத்துக்கு வர தான் செஞ்சாங்க. நீங்க நல்ல படம் எடுத்த கண்டிப்பாக வருவாங்க. இப்போ எல்லாம் மக்கள் படத்தில் எதாவது கன்டென்ட் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாங்க சார்.
இன்னொரு தவறான கருத்து என்னவென்றால் ஸ்டார் படங்களுக்கு மட்டும் தான் மக்கள் போவாங்க என்று. தவறான கண்ணோட்டம், ஸ்டார் படங்களை மட்டும் மக்கள் பார்ப்பதில்லை திரையரங்குக்கு அவனை இழுத்து வர படத்தில் மிகப்பெரிய அளவில் ஏதாவது இருக்க வேண்டும், முழு படம் சுவாரஸ்ய படுத்த வேண்டும்,இந்த வருடத்தில் குட்நைட் டாடா,போர் தொழில்,அயோத்தி இந்தப் படங்களில் எந்த உச்ச நட்சத்திரம் இருந்தார்கள்?
![Por tholil success meet video](/images/2023/07/02/por-tholil-team-video-viral-2-.jpg)
சரி விஷயத்துக்கு வருவோம்.. நேற்று போர்த்தொழி படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. அங்கு வந்த பத்திரிக்கையாளர்களை அந்த படகின் ஆடை வடிவமைப்பாளர் சீண்டியுள்ளார் போல. அதனால் இயக்குனரிடம் கேள்வி கேட்கும்போது ஒரு படம் தான் ஹிட் கொடுத்தீங்க, அதற்குள் தலைக்கனம் ஏறிவிட்டதா என்று கேட்டுள்ளார்.
பின்னர் இயக்குனர் புரியாமல் என்ன ஆச்சு என்று கேட்க, அந்த படத்தின் ஆடை வடிவமைப்பாளர் “நீங்க பத்திரிகையாளர் தானே கீழே உக்காருங்க” என்று சொன்னதை குறிப்பிட, உடனடியாக சரத்குமார் இடையில் புகுந்து அவர் சார்பாக மன்னிப்பு கேட்டவுடன் தான் அந்த பரபரப்பு கொஞ்சம் அடங்கியது. ரொம்ப matured ஆக நடந்து கொண்டார் சரத்.
Video: