ஆதிபுருஷனாக பிரபாஸ். என்ன பாகுபலி படம் மாதிரி எதிர்பார்த்தா இப்படி இருக்குது. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பாகுபலி படத்தை தொடர்ந்து அடுத்து பிரபாஸ் நடிக்கும் பெரிய பட ‘ஆதிபுருஷ்’. இந்த படத்தின் பட்ஜெட் 300 கோடியை கடந்து இன்னும் சில கொடிகள் CG/VFXக்கு செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய லீட் ரோலில் பிரபாஸ், கீர்த்தி சனன், சைப் அலி கான் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் தற்போது ரிலீஸ் ஆகியிருக்கிறது.
டீசர் ரிலீஸ் அனைத்துமே விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாகுபலியில் பிரபாஸை எப்படி பார்த்தோம், ஆனால் இந்த படத்தில் அவருக்கு அந்த லுக் கூட செட் ஆகவில்லை. அதுமட்டுமில்லாமல் படத்தில் CG/VFX எல்லாம் இன்னும் முடிக்கவில்லை போல, பொம்மை படம் பார்ப்பது போல இருக்கிறது. இந்த படத்தையா இவ்வளவு நாட்கள் எடுத்தார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது.
பாலிவுட் இதுபோல படங்கள் ட்ரை செய்வதாக இருந்தால், முதலில் இயக்குனர்கள் டெக்னாலஜியை முதல் நன்றாக கற்றுக்கொள்ளவேண்டும் ராஜமௌலி போல். அரைகுறையாக படித்துவிட்டு வந்து எடுத்தால் இப்படி தான் இருக்கும். இந்த வரும் பொங்கலன்று ரிலீஸ் ஆகா இருக்கிறது.
இந்த படத்தின் டீசரைப்பார்த்து விஜய் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர். காரணம் இந்த படம் தான் தளபதி வீஜயின் வாரிசு படத்துடன் மோத இருக்கிறது. இதை பார்த்துவிட்டு இந்த படமாடா எங்களுக்கு போட்டி என்று நக்கலடித்து பிரபாஸ் ரசிகர்களை கொஞ்சம் இணையத்தில் கடுப்பேற்றி வருகின்றனர்.
இந்த டீசரை பார்த்தவுடன் உங்கள் மனதில் தொடரும் கருத்துகளை கமெண்டில் பாதிஹ்விடவும்.