பாகுபலி மாதிரி சம்பவம் பண்ணுவாருன்னு பார்த்தா.. டீசருக்கு பரவால்ல.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பாகுபலி படம் வந்த பிறகு தான் இந்த பான் இந்தியா படம் என்ற வார்த்தை வந்தது. அதற்கு முன்னர் எல்லாம் அப்படி இல்லை. அந்த படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் ஒரு பயங்கர ரீச் கிடைத்தது. அதுவும் பிரபாஸ்க்கு எல்லாம் வேற லெவல். அவர் அடுத்து நடிக்கும் படங்கள் எல்லாமே பான் இந்திய படங்களாகவே consider பண்ணாங்க.
இப்போ அவர் நடித்து அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் படம் ஆதிபுருஷ். இந்த படத்தின் டீசர் போன வருடம் ரிலீஸ் ஆகி இந்திய சினிமா ரசிகர்கள் எல்லாருமே கலாய்ச்சாங்க. எதுக்காக என்றால் படத்தில் கிராபிக்ஸ் சரியாக இல்லை என்று. அதற்குப்பின் ரிலீஸ் ஆன டீசரில் ஒரு அளவுக்கு பரவாயில்லை என்பது போல இருந்தது.
எனக்கு இந்த ஒரு பிரேம் ஆதிபுருஷ் படத்தின் கதையை சொல்கிறது. அழகான டிரெய்லர். படம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். அது எந்த பிரேம் என்று தான் நினைக்கிறீங்க. ராமர், சீதை, அனுமன் எல்லாரும் ஒரு பிரேமில் இருப்பாங்க. அந்த போட்டோ பலரின் வீட்டில் இருக்கும்.
படத்தின் கதை என்னவென்பது அனைவர்க்கும் தெரியும், பொன்னியின் செல்வன் மாதிரி தான் இந்த படமும் ஆனால் பெரிய திரையில் எப்படி காட்டப்போகின்றனர் என்பதில் இருக்கிறது ஆச்சர்யம். பிரபாஸ் இருப்பதால் தான் இந்த படகுக்கு பெரிய எதிர்பார்ப்பு. சீதையாக கீர்த்தி சனன், சென்னம லக இருக்காங்க. புத்தகத்தில் சீதை எவ்வளவு அழகு என்று வர்ணிச்சங்களோ அது போல.
Video: