பொண்ணுக கூட இருந்ததை, பண்ணினதை கூட பசங்க கிட்ட ஷேர் பண்ணுவிங்களா.. லவ் டுடே படத்தை கிழித்து தொங்கவிட்ட கோமாளி பட நடிகை.
ஜெயம் ரவி படத்துக்கு பார்க்கணும்னு போய் டிக்கெட் கிடைக்காம திரும்பி வந்தது தாம் தூம் படத்துக்கு அப்புறம் இந்த படம் தான் #கோமாளி படம் தான். இந்த படம் ஜெயம் ரவிக்கு பெரிய பிரேக்கா அமைந்தது, மேலும் பிரதீப் ரங்கநாதன் என்னும் ஒரு நல்ல இயக்குனரை தமிழ் சினிமாவிற்கு வழங்கிய படம். மனிதநேயம் என்றவொரு கருத்து எப்படி சொன்னால் இந்த ஜெனெரேஷன் புரிந்து கொள்வார்களோ அப்படி சொல்லிருப்பாங்க.
மனிதநேயம் காப்பாற்றப்பட்டது கோமாளி திரைப்படத்தின் மூலம். மதம் எனப் பிரிந்தது போதும் மனிதம் ஒன்றே தீர்வாகும். மனிதனிடம் மாறாதது மனிதநேயம் மட்டுமே என நிரூபித்து விட்டார் டைரக்டர். இதை ஒரு கவிதை போல சொல்லவேண்டும் என்றால் கோமாளி பார்த்தேன் கோமாவில் இருந்து கண் விழித்தேன் கண்ணீர் வரவழைத்தது 15 வருடங்கள் வாழ்த்த வாழ்க்கை, ஒரு சிறந்த திரைப்படம், உண்மையான கதை களம் இன்று நம்மிடம் உயிருடன் இருப்பது மனிதநேயம் மட்டும்தான்.
அந்த படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாக நடித்தவர் RJ ஆனந்தி, யோகி பாபுவின் மனைவியாக நடித்திருப்பார். எமோஷனல் சீனில் பிச்சு உத்தரீர்பார். இவங்களுக்கு இந்த படம் நல்ல நற்பெயரை வாங்கிக்கொடுத்து. இவங்க இப்போ புக் ரெவியூ பண்ணிட்டு இருக்காங்க, அதுக்கு செம்ம வரவேற்பு. இப்போ இவங்க சமீபத்தில் பண்ணின புக் ரிவியூ காமசூத்ரா சம்மரி பற்றி. அப்போது இடையில் லவ் டுடேவில் வரும் டாக்ஸிக் பசங்க மெசேஜ் பற்றி பேசியிருப்பார். அது படத்தை ரோஸ்ட் செய்யாமல் செய்திருப்பார்.
அதில் பசங்க செய்யும் சில விஷயங்களை அப்படியே அம்பலப்படுத்தியிருப்பார் பிரதீப். அதில் ஒரு காட்சியில் நீ காதலிக்கும் பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறாய் ஆனால் அந்த அந்தரங்க விஷயத்தை எவ்வளவு private ஆக வைத்துக்கொள்ளவேண்டும் ஆனால் அதை கூட நீ உன்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறாய். இதனை நாங்கள் எப்படி நகைச்சுவையாக எடுத்துக்கொள்வோம் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்று ரோஸ்ட் செய்துள்ளார்.
நியாயம் தானே?
Video: