பீச்சை சுற்றிவரும் விஜய டிவி குட்டிப்பொண்ணு பிரணிகா! லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
பீச்சை சுற்றிவரும் கோடம்பாக்க அழகிகள்.. குட்டிப்பொண்ணு பிரணிகாவும் அதில் ஐக்கியமாகிவிட்டார் போல.. பிரணிகா… விஜய் டிவியின் பாப்புலர் முகம், கம்பனி ஆர்டிஸ்ட் என்று கூட கூறலாம். விஜய் டிவியில் ஒருசில சீரியல்களில் நடித்து வரும் பிரணிகா ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் சில சீரியல்களில் தலை காட்டி வருகிறார்..
சூப்பர் சிங்கர் முதல் ஸ்டார்ட் மியூசிக் வரை விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர் டிவி ஆர்டிஸ்ட் களை அழைத்து வந்து ஆட விடுவது விஜய் டிவியின் வழக்கம். அதில் பிரணிகா ஒன்றும் விதி விலக்கல்ல.
சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இளம் தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தது பிரணிகாவிற்று மேலும் புகழை சேர்த்தது.. இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள், வீடியோக்கள் பார்த்து ரசிகர்கள் ஃபயர் விட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஒரே லைக்ஸ் மழை தான் பிரணிகா காட்டில்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்துடன் “நான் பயணம் செய்கிறேன், ஏனென்றால் நான் எவ்வளவு நல்லது கெட்டதை பார்த்திருக்கிறேன், எவ்வளவு பார்க்கவில்லை, இன்னும் எவ்வளவு பார்க்க வேண்டி உள்ளது “என்பதை இது எனக்கு உணர்த்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கனா காணும் காலங்கள் தொடரில் இருந்து விலகிவிட்டார் பிரணிகா. சில பல சினிமா வாய்ப்புகள் வந்ததால் விலகிவிட்டார் என தொலைக்காட்சி சைடில் கிசுகிசுக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் அவரைத் தொடரில் பார்க்காததால் மிஸ் செய்து வந்த ரசிகர்களுக்கு பம்பர் பரிசாக வந்திருக்கிறது அவர் புகைப்படங்கள்.
தற்போது பீச்சை சுற்றிச்சுற்றி புகைப்படம் எடுப்பது டிரெண்ட் போல.. ஆக, பிரணிகா மட்டும் அதில் விதிவிலக்கா என்ன? சென்னையின் N4 பீச்சில் பாறையின் மேல் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் அவர் புகைப்படங்கள் லைக்ஸை அள்ளி வருகிறது.