சிவா அடிச்சாரு பாருங்க அந்த பாரின் பொண்ணுக்கு ஒரு கிஸ்சு. சம்பவம் இருக்கு. பிரின்ஸ் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரு வழியா இப்போ வரும், அப்போ வரும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க, ஒரு வழியா ட்ரைலர் ரிலீஸ் பண்ணிட்டாங்க. ரொம்ப ப்ரோமிசிங்கா இருக்கு, ஜாலியா இருக்கு, கருத்து சொல்றேன்னு கலவரம் பண்ணல, ரொம்ப டீசெண்டா இருக்கு. படம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எமோஷன்ஸ் அங்கும் இன்றும் தெளிச்சு ஜாலியா ஒரு படம் பண்ணிருக்காங்க. கண்டிப்பா இந்த படம் வரும் தீபாவளிக்கு கார்த்தியோட சர்தார் படத்துக்கு tough கொடுக்கும். பேமிலி ரசிகர்கள் கண்டிப்பா action படத்தை விட இந்த படத்தை விரும்பி பார்க்க அதிக வாய்ப்பு இருக்கு.
சிவக்காகவே டைலர் made படம் போல இருக்கு. எப்படி டான், டாக்டர்ல காமெடிய வெச்சே படம் நூறு கொடு வசூல் பண்ணுச்சோ, வந்த படம் அவரோட முந்தய படங்களுக்கு tough கொடுக்கும் போல. மேலும், இந்த படத்தின் youtube-ல நம்ம ரசிச்ச காமெடியன்ஸ் எல்லாரும் ஒர்க் பண்ணிருக்காங்க. அதுவும் பாரத் பேசும் அந்த காமெடி வயிறு குலுங்க ட்ரைலரிலேயே சிரிக்க வைக்குது.
சத்யராஜ் எப்போவும் போல பின்னி பெடல், சிவாவும் சூப்பரா பண்ணிருக்கார். மரியாக்கு இந்த படம் நல்ல ஒரு தொடக்கமாயிருக்கும் தமிழ் சினிமால. ஆனந்தராஜ் வரும் காட்சிகளும் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்க போகிறது. என்ன ஒரு பாரின் பொண்ணு இந்தியா வந்தா எப்படி தமிழ் படங்களில் பேச வைப்பாங்களோ, அதே தமிழை பேச வெச்சிருக்காங்க. தெலுங்கு இயக்குனர் என்பதால் கொஞ்சம் தெலுங்கு வாடை அடிக்கிறது, இருந்தாலும் அது பெரிய விஷயம் அல்ல.
இந்த படம் ஹிட் ஆகுறதை வைத்து தான் மற்ற இண்டஸ்ட்ரி இயக்குநர்களோடும் சேர்ந்து வேலை செய்யலாம் என்ற culture உருவாகும். மேலும் அடுத்து, தனுஷின் வாத்தி, தளபதியின் வாரிசு படங்கள் வேற வருது.
Video: