எதே சாதுர்யமா handle பண்ணி ஹீரோயின்ன கூட்டிட்டு போய்டுவாரா. ப்ரிண்ஸ் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Prince promo video viral

இந்த ப்ரோமோ கட் பார்ததுக்கப்றம் பிரின்ஸ் படம் மேல ஒரு நம்பிக்கை வருது, காரணம் படத்தில் கதை இருக்கோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக காமெடி வேற லெவெலில் ஒர்கவுட் ஆகியிருக்கும் போல. ஒரு இரண்டு நிமிட ப்ரோமோக்கே இவ்வளவு அலப்பறை பண்றாங்களே, படம் பூரா என்னென்ன பண்ண போறாங்களோ. நடிகர் சத்யராஜ் வேற கூட இருக்காரு. கண்டிப்பா காமெடிய சம்பவத்திற்கும் லோலாய்க்கும் பஞ்சம் இருக்காது.

இதில் என்ன ஆச்சர்யமான விஷயம் என்றால் இயக்குனரே அலப்பறை பண்றாரு. ரொம்ப சீரியஸா பேசுற மாதிரி இருக்கு, ஆனா பங்கமா கலாய்ச்சிருக்காருன்னு நமக்கு ஒரு இரண்டு நிமிடம் கழிச்சு தான் புரியுது. எல்லாருக்கும் இவர் மேல ரொம்ப பெரிய நம்பிக்கை இருக்கு, ஜாலி ரைடா படம் எடுத்திருப்பாரு என்று. இவரோட லாஸ்ட் படம் ஜாதி ரத்னாலு செம்ம காமெடியா இருக்கும். டைம் கிடைத்தால் கண்டிப்பா பாருங்க.

Prince promo video viral

அந்த படத்தில் ஒரு எமோஷனல் கன்டென்ட் இருக்கும், ஆனால் ஹீரோ பண்ணும் சில செயல்களால் அவருக்கு இறுதியில் நல்லது நடக்கும். ஆனால் ஹீரோவும் அவரும் சந்திச்சிக்ககூட மாட்டாங்க. அது தான் இந்த இயக்குனரோட பெரிய ப்ளஸ். ஹீரோவும், அந்த கதாபாத்திரத்தையும் சந்திக்க வைத்து BGM போட்டு முடிப்பது எல்லாம் பழைய டெக்கினிக். ஏன் அந்த கதாபாத்திரத்திற்கு கூட ஹீரோ தான் ஹெல்ப் பண்ணாருன்னு தெரியாது.

அதனால் இந்த படத்தை தாராளமா நம்பலாம். டிக்கெட் எல்லாம் ஓபன் ஆயிடுச்சு. பேமிலியோட போங்க, தீபாவளியை ஜாலியா கொண்டாடுங்க, சந்தோசமா இருங்க. இந்த வீடியோ பாத்துட்டு இப்போ சிரிச்சிட்டு போங்க.

Video:

Related Posts

View all