எது நடக்ககூடாதுன்னு நினைச்சோமோ அது நடந்திடுச்சு மக்களே. பிரின்ஸ் பட review. வீடியோ வைரல்.
எது இந்த படத்துக்கு நடக்ககூடாதுன்னு நினைச்சோமோ அது தான் நடந்திருக்கு. சிவகார்த்திகேயன் ஒரு விஷயத்தை நல்ல புரிஞ்சிக்கணும். அவர் கிட்டத்தட்ட 25வது படத்தை நெருங்கிடு இருக்காரு, இன்னும் இது மாதிரி stalking, காமெடியை நம்பியே படத்தை எடுக்கக்கூடாது. எதாவது நல்ல எளிமையான கதை அதில் காமெடி அப்டின்னு இருந்தா, காமெடிய ஒர்கவுட் ஆகவில்லை என்றாலும் படம் பார்த்தவர்களுக்கு கதைன்னு எதாவது இருந்ததே என்ற திருப்தி ஏற்படும்.
இதை எதற்காக சொல்லுகிறோம் என்றால், விஜய், அஜித் அடுத்து அவர் இருக்காரு வணிக ரீதியாக. அவர் படம் ஹிட் ஆனால் பெரிய லெவெலில் ஆகும்,பிளாப் ஆனாலும் அப்படி தான். இந்த படம் சிவகார்த்திகேயனின் இரண்டாவது, மூன்றாவது படமாக இருந்திருந்தால் யாரும் இவ்வளவு கடுமையாக விமர்சனம் வைத்திருக்கமாட்டாங்க. அதுமட்டுமில்லாமல் முதல் ஷோ பார்த்தவுடனே இணையத்தில் விமர்சனங்கள் வந்துவிடும், கூட வந்த படம் நல்லா இருக்கிறது என்றால் பணம் போனாலும் பரவாயில்லை அந்த படத்தை பார்க்கலாம் என்று டிக்கெட் புக் பண்ணவங்க கூட கேன்சல் பண்ணிடுவாங்க.
படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால், ஸ்கூல் portions ரொம்ப நல்ல இருந்தது. அங்கு வரும் காமெடி நல்லா ஒர்கவுட் ஆகியிருக்கு. மேலும்,ஆனந்தராஜ் கூட அந்த போலீஸ் ஸ்டேஷன் காமெடி செம்மயா ஒர்கவுட் ஆகியிருக்கு. அதற்குப்பின் பெருசா மனதில் எதுவும் நீக்கவில்லை. ஹீரோயின்னா அறிமுகம் ஆன அந்த பொண்ணு சூப்பர், நல்ல perform பண்ணிருக்காங்க. ரொம்ப நாளா டான்ஸ் ஆடுறாங்க. இன்னும் நிறைய படங்கள் கமிட் ஆக வாய்ப்பிருக்கு. நல்ல ஒரு debut. ஜாதி ரத்தினாலு படம் மாதிரி படம் முழுக்க காமெடிய ஒர்கவுட் ஆகியிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் செல்லும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
இயக்குனர் அனுதீப்போட ஸ்ட்ராங்கான விஷயம் காமெடிய தான், அது பெரிய மிஸ்ஸிங். தெலுங்கு இயக்குனர் என்பதால் தமிழ் மொழிக்கு அடாப்ட் ஆகலையா என்று தெரியவில்லை. எப்போவும் போல சத்யராஜ் performance செம்ம, ஒத்தை ஆழ படத்தை தூக்கி நிறுத்தறதே SK தான்.
அடுத்த விஜய், அடுத்த அஜித் என போட்டி போடுவதை விடவும்… 100 கோடி வசூல், 100 கோடி வியாபாரம் செய்வதை விடவும்..
தன்னை நம்பி வரும் ரசிகர்கள் முட்டாள் என நினைத்து படம் எடுக்காமல் இருப்பதே முக்கியம்… சினிமாவில் இருக்கும் ஒருவரே இப்படியொரு கருத்தை தெரிவித்திருக்கிறார் என்றால் படம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்..
Rating: 2.5/5
Video:
Blockbuster #Prince 🎉pic.twitter.com/lucJ9Qu76p
— 🥶. (@KuskithalaV6) October 21, 2022