எல்லா பொண்ணுகளுக்கு இப்போ விஜய் சேதுபதி கூட தான் நடிக்கனுன்னு ஆசை போல.. பிரிஷா சிங் போட்டோஸ் வைரல்.
தமிழ்ப் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் - நடிகை ப்ரிஷா சிங் ! !
ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் அல்லு சிரிஸ் நடிப்பில், தெலுங்கில் பிரமாண்டமாக வெளியாகும் “ப்பட்டி” ( Buddy ) படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் நடிகை ப்ரிஷா சிங். இவர் சமீபத்திய பேட்டியில் தமிழ்ப் படங்கள் தனக்கு ரொம்பப்பிடிக்குமென்றும், விஜய் சேதுபதியோடு நடிக்க ஆசையென்றும் கூறியுள்ளார்.
திரைத்துறைக்குள் ப்ளாக்பஸ்டர் கார்த்திகேயா நாயகன் நிகிலின் ஸ்பை படத்தில் நாயகியாக அறிமுகமாகும் இவருக்கு இந்த வருடம் மிகச் சிறந்த வருடமாக அமைந்துள்ளது. இவர் இரண்டாவதாக நடித்த அல்லு சிரிஸ் ஜோடியாக நடித்துள்ள Buddy திரைப்படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. பிரமாண்டமாக உருவாகியுள்ள ஸ்பை திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு எதிர்பார்ப்பு மிக்க பிரமாண்ட படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாவதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் ப்ரிஷா சிங்.
இது குறித்து அவர் கூறுகையில் .. ஸ்பை படம் மனதுக்கு மிக நெருக்கமான படம். மிகப்பெரிய ஆக்சன் படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாததது. நிறைய திருப்பங்களுடன் இந்தப்படம் அனைத்து ரசிகர்களையும் கவரும் படைப்பாக இருக்கும். என்னுடைய பாத்திரத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். மேலும் Buddy படம் பற்றி கூறுகையில்.. Buddy படத்தில் நான் விமான பணிப்பெண்ணாக நடித்துள்ளேன். இப்படத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது, இப்படத்தை தமிழ் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். எனக்கு தமிழ் படங்கள் மிகவும் பிடிக்கும். விரைவில் தமிழ் படத்தில் நடிப்பேன். நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டுமென்பது ஆசை என்றார்.
நடிப்பை படிப்பாக படித்து, நடனம் முதல் அனைத்தையும் கற்றுக்கொண்டு திரைத்துறைக்கு வந்துள்ளார். விரைவில் தமிழ் திரைப்படங்களிலும் தோன்றவுள்ளார் ப்ரிஷா சிங்.