மனைவியுடன் செம்ம ரோமன்ஸ் மூடில் பிரிதிவிராஜ்.. என்ன அழகு என்ன அழகு. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
இப்படிப்பட்ட மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றவொரு பழமொழி உண்டு. உண்மையான காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான பாடல் நியாபகத்துக்கு வருகிறது இவர்களின் போட்டோவை பார்க்கும்போது. அந்த பாடல் நம்ம துணிவு இசையமைப்பளார் ஜிப்ரான் போட்டது.
அந்த வரிகள் சில: வேறதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும் உன் எதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும் உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம் தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும் இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும் தாரமே தாரமே வா
2023ம் ஆண்டு வந்தும் இந்த பாடல் இன்னும் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. நன்றி பிரிதிவிராஜ் - சுப்ரியாக்கு. ஏனென்றால் அவர்கள் போட்டோவை கண்டதும் அந்த பாடல் நினைவுக்கு வந்தது. ஒருமுறை மீண்டும் youtube சென்று ரீ-விசிட் பண்ணிட்டு வந்தோம், ஒரு மாதிரி மனம் மனைவியை நினைத்து உருகுகிறது.
புத்தாண்டை முன்னிட்டு இருவரும் ஜாலியா வெளிய போயிருப்பாங்க போல, அந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல். பிரித்விராஜ்க்கு இந்த வருடம் ரொம்ப முக்கியமான வருடம், அவர் எடுக்கும் படம், நடிக்கும் படம் என்று ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ். இவர் பிரபாஸுடன் நடிக்கும் சிலர் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. KGF இயக்குனரின் அடுத்த படம் அது.
--
Latest Photos:
Couple goals! @PrithviOfficial and wife #supriya celebrate New Year in Turkey #NewYear #CoupleGoals pic.twitter.com/NWQmHA3BbJ
— sridevi sreedhar (@sridevisreedhar) January 1, 2023