மறைந்த பாடகர் KKவிற்காக பிரியா பவானி ஷங்கர் உருகி எழுதிய கடிதம்.. கண்டிப்பா படிக்கவும்..!
மறைந்த பாடகர் KKக்காக பிரியா பவனி ஷங்கர் எழுதியது:
ஒரு இசைக் கலைஞன் மறைந்தாலும் அவரது இசையும் குரலும் நம் நினைவுகளோடு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாழும்.
5 வயதில் cousins கூட நடனம் ஆடிய ஒரு விடுமுறை தினத்திற்கு, 9ஆம் வகுப்பில் fm கேட்டுக்கொண்டே record note எழுதிய இரவுக்கு, காதல் வந்த அந்த நொடிக்கு, தனிமையில் அழுத நள்ளிரவு 3 மணிக்கு என நம்மை ஒரு நொடியில் கடத்திப்போக ஒரு பாடலால் முடியும்.
அப்படி நம் வாழ்க்கையின் அடையாளங்களுடைய குரல் வடிவங்களாக இருக்கும் பாடகர்கள் மனசுக்கு மிக நெருக்கமானவர்கள்.
நாம் நினைப்பதைவிட பல ஆயிரம் மடங்கு, KK தன் அடையாளங்களை நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார்❤️
Love & Respect ❤️ #KK pic.twitter.com/dAFWc6fCse
— Priya BhavaniShankar (@priya_Bshankar) June 2, 2022