8 வருடங்களுக்கு பிறகு நல்ல சேதி கூறியிருக்கும் ப்ரியா-அட்லி ஜோடி! மகிழ்ச்சியில் அட்லி! அதுக்குள்ள ஹாட் போட்டோஷூட்.
8 வருடங்களுக்கு பிறகு நல்ல சேதி கூறியிருக்கும் ப்ரியா-அட்லி ஜோடி. மகிழ்ச்சியில் அட்லி ரசிகர்கள். நடிகை கிருஷ்ண ப்ரியா, இயக்குனர் அட்லியின் மனைவி. விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடர் மூலம் டிவிக்கு அறிமுகமானார். சூர்யா நடித்த சிங்கம் திரைப்படத்தில் அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்திருந்தார். அதன்பிறகு ஒரு சில படங்களிலும் நடித்துவந்தார். சிலப்பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் அட்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இயக்குனர் அட்லி இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்தவர். ஆர்யா, நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தை இயக்கியதின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். முதல் படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதும் வாங்கினார்.
அதன்பிறது தெறி, மெர்சல், பிகில் எனப் பல வெற்றிப் படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கானை வைத்து தவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
ப்ரியா மற்றும் அட்லி இருவருமே சொசியல் மீடியாவில் ஆட்டிவ்வாக இருந்து வருபவர்கள். அவ்வப்போது தங்கள் காதல் ததும்பும் புகைப்படங்கள் பதிவிட்டு வந்தனர். ரசிகர்களும் தங்கள் அன்பான லைக்ஸ்களை வாரி வழங்கி வந்தனர்.
“நான் உனக்கு உறுதி அளிக்கிறேன். எப்பொழுதும் உன் பின் பக்கமலமாக இருந்து உன் முகத்தில் உள்ள சிரிப்பு சிறிதளவும் குறையாதவாறு என்றும் என்றென்றும் பாத்துக்கொள்வேன்” என்று அழகான வாசகத்துடன் தனது கணவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமீபத்தில் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார் ப்ரியா.
தங்கள் வீட்டுக்கு வரவிருக்கும் புது வரவுக்காக காத்திருக்கும் ப்ரியா- அட்லி ஜோடி. ஆம்.. ப்ரியா தற்போது கர்ப்பமாக உள்ளார். " yes.. we r pregnant" என்று இருவரும் மகிழ்ச்சியாக புகைப்படங்களை பதிவேற்றியிருக்கின்றனர். சக நடிக/நடிகைகள் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.