ப்ரியாமணி சும்மா மிரட்டி விட்ருக்காங்க. கடைசில அந்த வார்த்தை. டாக்டர் 56 லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ், தெலுகு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழியில் நடிப்பாலும் நடனத்தினாலும் பல கோடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை. பருத்திவீரன் என்ற ஒரு படம் போதும்,life டைம் செட்டில்மென்ட் அவங்களுக்கு. தற்போது மீண்டும் நம்மை என்டேர்டைன் பண்ண பான் இந்தியா படமொன்றில் நடித்திருக்கிறார். அந்த படத்தின் பெயர் டாக்டர் 56, இதில் இவங்க தான் நாயகி.
ஹிந்தி நடிகைகளுக்கு உள்ள உடல்வாகு வேறு. தமிழ் நடிகைகளுக்கு உள்ள உடல்வாகு வேறு. ஆனால் வேண்டுமேன்றே கவர்ச்சி காட்சிகளில் நடிக்க கட்டாயப்படுத்துகின்றனர் என்று கூறிய நடிகை பிரியாமணி கொஞ்ச நாட்களுக்கு முன் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவங்க நடிச்ச வெப் சீரிஸ், ஏற்று நடித்த சப்போர்டிங் கதாபாத்திரங்கள் எல்லாம் ஹிட்டானதால் அதை அப்படியே மறந்துட்டாங்க. இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இனி தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவுள்ளேன் என்று கூறி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.
இந்த டாக்டர் 56 படம், முக்கியமான பிரச்னை பற்றி பேசுகிறது. அதுமட்டுமில்லாமல் இதுபோன்று இனி வரும் களங்களில் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற solution கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. என்ன solution பயம் தான் solution. பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே இருக்கு, அதை பேஸ் பண்ணி நிறைய படங்கள் வந்தாலும், தவறு செய்பவர்கள் திருந்தியபாடில்லை. இந்த படம் எப்படி தாக்கம் ஏற்படுத்துகிறது என்று பார்ப்போம்.
அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை பிரியாமணி நடனமாடியுள்ளதாகவும் இந்த பாடல் படத்தின் முக்கிய பாடலாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பாடல் மட்டுமில்ல முக்கியமான கதாபாத்திரம் என்றும் சொல்லப்படுகிறது.
Video: