மனுஷன் நடிப்பை இப்படி சொல்லி கொடுத்திருக்கார். பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Ps1 bts shoot photos viral

பொன்னியின் செல்வன் பிவர் தற்போது அப்படியே கொஞ்சம் மெதுவாக குறைந்து விட்டது. படம் ரிலீஸாகி ஒரு மாதம் ஆன நிலையிலும் படத்துக்கு செல்லும் கூட்டம் குறையவில்லை. காரணம் படத்துக்கு ஒரு ரிப்பீட் value இருக்கிறது. அதனால் முதல் தடவை தனியாக பார்த்தவர்கள் மீண்டும் குடும்பத்தை அழைத்து சென்று பார்த்து ரசிக்கின்றனர். இது தான் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி. 500 கோடியை கடந்து வெற்றிநடை போடுகிறது. இந்த முதல் பாகத்துக்கே இவ்வளவு ரெஸ்பான்ஸ் என்றால், இரண்டாம் பாகத்துக்கு ஏற்கனவே hype வானளவு இருக்கிறது. முதல் பாகத்தை முடிக்கும் போதே, இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் மணிரத்னம் முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் என்றாலே அனைவரும் கூறுவது அவர் ஒரு மாஸ்டர் பிலிம்மேக்கர் என்று தான். அதுமட்டுமில்லாமல் மற்ற மொழி பெரிய இயக்குனர்கள் கூட மாஸ்டர் என்று தான் குறிப்பிடுவர். ஏனென்றால் மணிரத்னம் எடுத்த படங்கள் மேல் உண்டான தாக்கம் காரணமாகவே பலர் இந்த சினிமாத்துறையில் இயக்குனர்களாக சுற்றி வருகின்றனர். எப்படி சச்சின் ஒரு ஜெனெரேஷன் மக்களை inspire செய்து கிரிக்கெட் விளையாட வைத்தாரோ, அதுபோல தான் மணிரத்னமும்.

Ps1 bts shoot photos viral

இவரின் நீண்ட கால கனவான பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து முடித்துவிட்டார். படமும் வேற லெவெலில் ஹிட் ஆகியிருக்கு. இதனால் இதுபோன்ற பீரியட் படங்களை பாகுபலி போன்று பெரிய கிராபிக்ஸ் எல்லாம் இல்லாமல், குறைந்த செலவில் மிக பிரமாண்டமாக உருவாக்கலாம் என்று நிரூபித்து காட்டியுள்ளார். பீரியட் ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணிக்கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு இது ஒரு முன்னுதாரணம்.

மணிரத்னம் எப்போதுமே ரியாலிட்டியை நம்புபவர். அதனால் மாஸ் சீன்ஸ் எப்போதுமே மிகவும் கம்மியாக இருக்கும். கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே வைப்பார். அவர் சொல்லிக்கொடுக்கும்போது மிகவும் கவனமாக கவனித்து அதை அப்படியே செய்தால் போதும், இதை ரஜினியே மேடையில் குறிப்பிட்டார். ஸ்டாக் expression எல்லாம் வைத்துக்கொண்டால் அவர் ஒத்துக்கமாட்டார் என்று.

தற்போது மணிரத்னம் நடிப்பு சொல்லித்தரும் பொன்னியின் செல்வன் BTS புகைப்படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன, அது இணையத்தில் வைரல்.

Latest Photos:

Related Posts

View all