இனி வாய் பேசுவ.. தனியார் தொலைக்காட்சிக்கு தரமான நெத்தியடி கொடுத்த புகழ்.. முழு விவரம்.
சமீபத்தில் விஜய் டிவி நட்சத்திரம் புகழ் - பென்சிக்கு திருமணம் இனிதே நடந்து முடிந்தது. நண்பர்கள், பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்க ஆரம்பமானது சர்ச்சை. இதை கிளப்பிவிட்டது ஒரு தனியார் செய்தி சேனல். அது யாரென்று உங்களுக்கே தெரியும். காரணம் அந்த பெண் முஸ்லீம், பையன் ஹிந்து.
அதாவது ஒரு வருடத்திற்கு முன்னரே புகழ் மத/சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் இப்போது இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் செய்தியை வெளியிட்டனர். இது பெரிய சர்ச்சை ஆனது. பகுத்தறிவுக்கு வந்த சோதனை என்று தனியார் செய்தி சேனல் ஒன்று செய்தியை வெளியிட்டது. அரசியல் ஆக்கியது.
அவங்க குடும்பத்தை அவங்க பார்த்துக்குவாங்க நீ மக்களுக்கு பயனுள்ள செய்திகளை மட்டுமே சொல்லுங்க என்று பல கருத்துக்கள் வந்தாலும் சிலர் நடிகன் என்றாலே நாடகம் தானே, இதில் இதெல்லாம் சகஜம் தான் அவர்களுக்கு என்ற கருத்துக்களும் வந்தன.
அப்போது அமைதி காத்த புகழ் நேற்று தரமான நெத்தியடி ஒன்றை பதிலாக கொடுத்துள்ளார்.
அவர் ட்வீட் செய்தது: என் தந்தை அன்பிற்கு ஒரு முறை என் தாய் அன்பிற்கு ஒரு முறை என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை வேறு அன்பு உள்ளங்கள் ஆசை பட்டால் மேலும் ஒரு முறை தயார். இந்தியனாக இருக்கிறேன். எல்லா புகழும் இறைவனுகே🙏🏻
வாழ்த்துக்கள் புகழ் - பென்சி. பல்லாண்டு நலமுடன் வாழ்க.