ஒருச்சின்ன கண்ணசைவிலேயே மொத்தமாக கவுத்துவிட்டார் இளைஞர்களை - பூஜிதாவின் ரீசன்ட் ரீல் வீடியோ.
பூஜிதா தேவராஜு ஒரு நடிகை, மாடல் மற்றும் வீடியோ ஜாக்கி ஆவார். தொலைக்காட்சி துறையில் தனது பணிகளுக்காக நன்கு அறியப்பட்ட தொகுப்பாளர் அவர். சன் டிவியில் ஆங்கராக இருந்தவர் பூஜிதா.
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியான நவம்பர் ஸ்டோரி வலைத் தொடரின் மூலம் அவர் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த தொடரில் நடிகை தமன்னா லீட் ரோலில் நடித்திருந்தார் மற்றும் பசுபதியும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு பல முன்னனி இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து இயக்கிய நவரசா வலைத்தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பூஜிதா தனது ஏகப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றிக்கொண்டே இருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்தில் மிக டிரெடிஷனலாக பச்சை நிற பாவாடை தாவணியில் மிக நேர்த்தியான அழகுடன் காணப்படுகிறார். அவரது புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
பூஜிதாவின் ஏதோ ஒரு ஷாப்பிங் மாலில் வாக் செய்வது போன்ற ரீல் வீடியோ ஒன்று டிரென்டாகி வருகிறது. ரசிகர்கள் தங்கள் அன்பு மழையைப் பொழிந்து வருகின்றனர்.