மறைந்த தன் அன்பு தம்பி புனீத் ராஜ்குமாருக்காக உருகிய சிவராஜ்குமார்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜுக்குமார் வாழும் போதும் ஒரு சகாப்தமா தான் வாழ்ந்துள்ளார், மறைந்த பின்னும் மக்கள் மனதில் ஒரு சகாப்தகமாக தான் வாழ்கிறார். ஏனென்றால் அவர் வாழும்போது அவர் செய்த நல்ல விஷயங்கள் அவர் இல்லையென்றாலும் காலம் கடந்து பேசும் என்பதில் சந்தேகமில்லை. அவரைபற்றி ஒரு விஷயம் சமீபத்தில் படிக்கும்போது சில விஷயங்கள் தெரிய வந்தது. அதை உங்களுடன் இப்போ கீழே பகிர்கிறேன்.
அவர் இறந்தப்போ அவரோட இறுதி ஊர்வலத்துக்கு இருப்பது லட்சத்திற்கும் மேலான மக்கள் கலந்துக்கிட்டாங்க. அவர் சேர்த்த சொத்து அது தான். ஒரு மனிதன் வாழும்போது அவரின் அருமை தெரியாது, ஆனால் மறைந்தபின் இவ்வளவு அன்பு அவருக்காக சேர்ந்திருக்கிறது என்றால் அவர் எப்படிப்பட்ட மனிதராக வாழ்ந்திருக்கிறார் என்பது தெரிகிறது.
அவங்க அப்பா ராஜ்குமார் ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஒரு ட்ரஸ்ட் ஒன்னு ஆரம்பிச்சிருக்காரு. அந்த ட்ரஸ்டை அவரோட மறைவுக்கு பின் எடுத்து நடத்தியது புனீத் தானாம். 100, 200 குழந்தைகள் அல்ல மொத்தம் 1800 குழந்தைகளை படிக்கவைப்பதோடு மட்டும் அல்லாமல் அவங்களுக்கு தேவையான எல்லா விஷயங்களையும் அந்த டிரஸ்ட் மூலமா பண்ணி கொடுத்திருக்காரு. இதைவிட பெரிய விஷயம் என்னவென்றால்,
நாம் இப்போ இருக்கோம் எல்லாமே இவங்களுக்கு பண்ண முடியுது. ஒரு வேலை நான் இல்லாமல் போய்விட்டால் இந்த குழந்தைகள் மீண்டும் அநாதை ஆகிவிடுமே என்று அஞ்சி அந்த குழந்தைகளுக்கு மேல் உள்ள ட்ரஸ்டில் 8 கோடி ரூபாய் போட்டு வெச்சுருக்காராம். அவருக்கு முன்னாடியே சென்ஸ் பண்ணிட்டாரோ இல்லையான்னு தெரியல ஆனா குழந்தைகள் இப்போ நல்லா இருக்காங்க. அந்த பணம் மூலமா மதம் மாதம் வட்டி வருது, அதுவே இவங்க செலவுக்கு எல்லாம் சரியா இருக்கு. இந்த புண்ணியம் போதாதா அவருக்கு.
கண்ணதாசன் வரிகள் போல் வாழ்ந்த மனிதன். “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவன் போல யார் என்று ஊர் செல்லவேண்டும்..“கடவுளுக்கு இவ்வளவு சுய நலம் இருக்க கூடாது… நல்லவர்களை எல்லாம் சீக்கிரம் எடுத்து கொள்கிறது. சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் மறைந்த தன தம்பிக்காக மனமுருகி ஒரு பாட்டை பாடிய கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார். அந்த வீடியோ வைரல்.
Video: