சன்னி லியோன், ப்ரியாமணி மிரட்டும் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு கேங்ஸ்டர் படம். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வருகைக்கு பின் தான் நிறைய கேங்ஸ்டர் படங்கள் வந்த வண்ணம் இருக்கிறது என்று தோன்றுகிறது. அதற்கு முன்னாடி அந்த சம்பவம் எதுவும் நடக்கவில்லை தானே. இப்போ நிறைய கேங்ஸ்டர் படங்கள் வருகிறது. சமீபத்தில் கூட பரோல் படம் வந்து நல்ல விமர்சனங்களை பெற்றது.
லோகேஷ் மாஸ்டர் படத்துக்கு முன்பு அதாவது மாநகரம் படம் முடித்துவிட்டு ஒரு பேட்டியில் சொல்லிருப்பார். தமிழில் இன்னும் நிறைய கேங்ஸ்டர் படங்கள் வர வேண்டும், நான் கூட இப்போ ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார். தற்போது விஜையை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் படமே ஒரு கேங்ஸ்டர் படம் தான். அதுவும் அவர் அப்போது எழுதிய கதை அது.
எல்லா இயக்குனர்களும் ஒரு ஆண் ஸ்டாரை வைத்தே கேங்ஸ்டர் கதை எல்லாம் எழுதுவாங்க, ஆனால் ஒரு இயக்குனர் விவேக் கண்ணன் பெண்களை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து quotation கேங் என்ற படத்தை எடுத்துள்ளார். சும்மா மிரட்டுது ட்ரைலர். ஹீரோயின்களாக சன்னி லியோன், சாரா, ப்ரியாமணி ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜாக்கி ஷெராப் முக்கிய ரோல் பண்ணுகிறார்.
எப்போதுமே சன்னி லியோனை கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்த்தது இந்த சினிமா, ஆனால் இவர் மட்டும் தான் ஒரு action கதாநாயகியாக பார்த்திருக்கிறார். அவங்களும் பின்னி பெடல் எடுக்குறாங்க ட்ரைலரில். ப்ரியாமணி தான் வேற லெவல் மாசு. அப்படியே பருத்திவீரன் படத்தில் பார்த்தது போல இருக்குது. அவ்வளவு swagஆ இருக்காங்க. ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு படம் லோடிங்.
வீடியோ: