சந்திரமுகி-2 படத்தில் சந்திரமுகியாக நடிக்கவிருப்பது.. ப்பா இவங்களா.. செம்மயா இருக்குமே. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
சந்திரமுகி இரண்டாம் பாகம் படம் படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. படத்தை எப்படியாவது அடுத்த வருடம் சம்மர்க்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படப்பிடிப்பு பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த படத்தை சந்திரமுகி படத்தை இயக்கிட பி.வாசுவே தான் இயக்குகிறார். ஆனால் எப்படி அவர் முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் முடிச்சு போடுவார் என்று தெரியவில்லை. எப்படி லாரன்ஸ் கதாபாத்திரம் உள்ளே வருகிறது என்பதில் இருக்கிறது ட்விஸ்ட்.
இதுவரை தெரியவில்லை சந்திரமுகி படத்தின் sequel தான் சந்திரமுகி 2 என்று. இன்னும் அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை படக்குழு. அனேகமாக இவ்வளவு காம்ப்ளிகேஷன் இருப்பதால் கண்டிப்பாக இது புது கதையாக தான் இருக்கும் என்று நினைக்கிறோம். ஒன்றாம் பாகத்தில் நடித்த சிலர் இந்த படத்திலும் நடிக்கின்றனர் அதுதான் நம்மை sequel ஆ என்று யோசிக்கவைக்கிறது.
இது எல்லாம் ஒரு புறம் இருக்க, இந்த படத்தின் கதாநாயகி யார் என்பதில் இருக்கிறது சுவாரசியம். எப்படியும் அந்த நடிகையை வைத்து தான் கதைக்களம் நகர இருக்கிறது. ஜோதிகா மேட்ச் செய்யமுடியுமா நடிப்பில் சந்திரமுகியாக என்ற கேள்வியும் இழுத்து வருகிறது. ஆனால் இப்போது ஒரு கதாநாயகியின் பெயர் அடிபட்டு வருகிறது. அவங்க நடித்தால் கண்டிப்பா சம்பவம் தான். அந்த பெயர் கங்கனா ரணாவத். பிரிச்சு மேஞ்சிருவாங்க நடிப்பில். அதனால் இவங்க நடக்கவேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகின்றனர்.
இந்த படத்திற்கு இன்னொரு ப்ளஸ் என்னவென்றால் இந்த படத்தின் இசையமைப்பாளர். பாகுபலி,RRR படத்துக்கு இசையமைத்த கீரவாணி தான். இவர் இசையில் தனித்துவம் இருக்கிறது. அதனால் பின்னணி இசையில் எப்படியும் மிரட்டிவிட்டு விடுவார் என்பதில் சந்தேகமில்லை.