ஓஹோ Revolution பற்றியா.. கீர்த்தி வேற மாதிரி சம்பவம் பண்ண போறாங்க போலயே.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Ragu thatha latest update

இந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமா மாறிட்டு இருக்கு Hombale பிலிம்ஸ். சமீபத்தில் எடுத்த படங்கள் எல்லாம் வேற லெவல் ஹிட்டு. கிட்ட தட்ட இந்த வருடம் மட்டும் 2000 கோடி சம்பாதிச்சு இருப்பாங்க படங்கள் மூலம் மட்டும், அட ஆமாங்க KGF படத்தை தயாரிச்சது இவங்க தான் கிட்ட தட்ட 1500 கோடி அந்த படம் வசூல் பண்ணிருக்கு. அதுபோக சாட்டிலைட் உரிமங்கள், டிஜிட்டல் ரயிட்ஸ் வேற இருக்கு.

அதேபோல இப்போ சமீபத்தில் வெளிவந்த காந்தாரா படமும் 400 கோடிக்கு மேல் வசூல், அப்போது 2000ம் கோடி என்பது approx. அதற்குமேல் வசூல் செஞ்சிருக்கும். அதாவது profit மட்டும் 2000கோடிக்கு மேல இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. அதனால் இந்த நிறுவனம் வந்த லாபத்தை வைத்து நிறைய படங்கள் எடுக்க முடிவு செஞ்சிருக்காங்க.

இந்த தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் சைன் பண்ணின படம் சுதா கொங்கராவுடன், இந்த படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஹிந்தி சூரரை போற்று படத்தை ஏறத்தாழ முடித்து விட்டார் சுதா, இன்னும் கொஞ்ச நாட்களில் சூரியா அவருடைய ப்ரெசென்ட் கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்த பின் அந்த பட வேலைகள் தொடங்கி விடும். சூரியா ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்.

நேற்று, ஒரு இன்ப அதிர்ச்சியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படகியும் அவங்க தான் தயாரிக்கிறாங்க. அதற்கான பூஜையும் போட்டாச்சு. இந்த படத்துக்கு டைட்டில் கூட வெச்சுட்டாங்க, படத்தின் டைட்டில் ‘ராகு தாத்தா’. எதோ ஒரு பெண் போராளியை பற்றிய படம் இது. இது போன்று ரோல்கள் எல்லாம் கீர்த்தி பிச்சு உதறிடுவாங்க. இந்த படமும் அந்த லிஸ்டில் சேரும் என்று எதிர்பார்க்கிறோம்.

Latest Tweet:

Related Posts

View all