ஸ்ரீ திவ்யாவை இப்படி பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.. மிரட்டுது இந்த வீடியோ.. ரைட் டீசர் வைரல்..
நடிகை ஸ்ரீ திவ்யாக்கு தமிழ் படம் வந்து எதனை வருடங்கள் ஆச்சு. அடடா இவங்களை இப்படி பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு என்று இந்த டீசர் பார்த்தது மனம் துடிக்கிறது. ஒரு காலத்தில் நம்பர் 1 இடத்தை நோக்கி மிகவும் வேகமா நகர்ந்து கொண்டிருந்தாங்க. திடீர்னு அவங்க சினிமா வாழ்க்கையில் ஒரு பிரேக். என்ன ஆச்சு என்ற தெரியவில்லை.
ஒரு சில நடிகைகளுக்கு அப்படி நடக்கணும் என்று எழுந்திருக்கும் போல. அட அது ஏன் நல்லா நடிக்கத்தெரிந்த நடிகைகளுக்கு அப்படி ஒரு அடி விழுது என்று தான் தெரியவில்லை. இப்போ தமிழில் ப்ரியா பவானி பண்ணும் எல்லா ரோல்களிலும் நடிக ரொம்ப தகுதியானவங்க தான் ஸ்ரீ திவ்யா. அவங்க இடத்தை தான் இப்போ ப்ரியா புடிச்சிருக்காங்க.
விக்ரம் பிரபுக்கு பொன்னியின் செல்வன் படத்தை தவிர வேற எந்த படமும் சென்ற வருடம் ரிலீஸ் ஆனதாக தெரியவில்லை. ரொம்ப திறமையான நடிகர். rugged சாக்லேட் பாய் என்ற இரண்டு கேரக்டருக்கும் பொருந்துவாறு. இவருக்கு கடைசியா OTTல வந்த டாணாக்காரன் தான் செம்ம ஹிட்டு. எல்லாரும் பாராட்டிய படம்.
ஒரு நடிகனை மக்கள் கொண்டாட வேண்டும் என்றால் அவனுக்கு திரையரங்கு ஹிட் ரொம்ப அவசியம். இந்த ரைடு படம் மூலம் அது இவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசர் படு வேகமாக இருக்கிறது, ஸ்டாண்ட்ஸ் எல்லாம் அனல் கக்குகிறது. திரைக்கதை மட்டும் நன்றாக இருந்தால் போதும், படம் வெறியா இருக்கப்போகுது.
Video: