தம்பி ராமையா நல்லா வாழ்ந்திருக்காரு போல.. அது தான் கதை போல.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
போஸ்டர்லாம் பார்த்து ஏதோ Social message படம்னு நினைச்சேன்.. ஆனா யூத் ஆடியன்ஸ டார்கெட் பண்ணி கமர்ஷியலா தான் எடுத்திருக்காங்க 👌 தம்பி ராமையா மியூஸிக் also👌இது ரொம்ப வித்தியாசமான அட்டெம்ப்ட்டா இருக்கப்போகுது. சமுத்திரக்கனி, தம்பி ராமையா ஜோடி சேர்ந்தாலே அந்த படம் ஒரு மேஜிக் பண்ணும்.
இந்த படம் அப்படி என்ன பண்ணுது என்று பார்ப்போம். இந்த படத்தை இயக்கியது அவரோட பையன் தான். நல்லா தான் பண்ணிருக்காரு, அங்கு இங்கு சின்னகுறைகளை அந்த படத்தின் கதை நன்றாக இருந்தால் அது மறைத்துவிடும் என்பது தான் நிதர்சனமான உண்மை. அப்படி தமிழ் சினிமாவில் வந்து ஹிட் அடிச்ச லோ பட்ஜெட் படங்கள் ஏராளம்.
படக்குழுவினர் இதற்கு முன் ரிலீஸ் செய்த போஸ்டருக்கும் ரிலீசான ட்ரைலருக்கும் சுத்தமா சம்மந்தமில்லை. தம்பி ராமையா சுகர் டாடியா நடிச்சிருக்கார். சுகர் டாடி என்றால் என்னவென்று தெரியவில்லையா நீங்களே கொஞ்சம் google பண்ணி பாருங்க அதற்கான அர்த்தம் புரியும். ஆனால் அந்த அளவுக்கு இறங்கியிருக்க மாட்டாங்க .
கண்டிப்பா ஒரு சோசியல் மெசேஜ் கடைசியில் இருக்கும், சமுத்திரக்கனி வேற இருக்காரு. அப்படி எந்த மெசேஜ் இல்லை என்றால் தான் ஆச்சர்யம். ஆனால் யூத்க்கு எப்படி படம் எடுத்தா பிடிக்குமோ அந்த மாதிரி ட்ரை பண்ணிருக்காங்க. இதற்குப்பின் படத்துக்கு தேவை நல்ல மார்க்கெட்டிங் தான். மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தான் இந்த படத்துக்கும் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Video: