மகிழ்வான தருணம் இயக்குனருக்கு.. புதிய பயணம் இனிதே ஆரம்பம் இயக்குனருக்கு. லேட்டஸ்ட் அப்டேட் வைரல்.

Rajini 170 film update viral

நடிகர் ரஜினிகாந்த்-ன் 170வது படத்தை இயக்குகிறார் ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல். -லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ‘ஜெய் பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். லைகா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் 2024-ல் திரைக்கு வரும் என அறிவித்திருக்கிறார்கள்!

வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தி ஜெய்பீம் படத்தில் காட்சிகளை வைத்து வன்னியர் உணர்வோடு விளையாடிய இயக்குனர் ஞானவேல் இயக்கும் திரு.ரஜினிகாந்த் அவர்களின் #Thalaivar170 படத்தை புறக்கணிப்போம் என்று இப்போவே ஒரு குரூப் ஆரம்பிச்சிருச்சு. படத்துக்கு இப்போவே ப்ரோமோஷன் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.

Rajini 170 film update viral

ரஜினிகாந்த் அவர்களே -டி.ஞானவேல் அவர்கள் கிட்ட தட்ட பா. ரஞ்சித் போல தான், இன்னும் சொல்ல போனால் இருவரும் சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடி தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க உறிப்பினர்கள், ஆகையால் கண்டிப்பாக பொது உடமை சாயல் கண்டிப்பா இருக்கும், நீங்கள் COMERICAL வாய்ப்பு இல்ல என்று நினைக்கிறோம்.

இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த இயக்குனர் எடுத்த ஜெய் பீம் படம் இந்திய முழுவதும் பெரிய ஹிட் அடித்தது. இப்போது இந்த படத்தில் ரஜினியும் இருப்பதால் இந்த படம் பெரிய பான் இந்தியா படமாக உருவாகும் வாய்ப்பிருக்கிறது.

Latest Photo:

Related Posts

View all