மீண்டும் 22 வருடம் கழித்து.. அரவிந்த்சாமி தான் ரஜினியின் வில்லனா.. போடு கொல மாஸ் அப்டேட்.. முழு விவரம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தலைவர் 169 (ஜெயிலர்) படத்தில் நடித்து வருகிறார், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில். பீஸ்ட் படத்தில் விட்டதை இந்த படத்தில் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார் நெல்சன். படப்பிடிப்பு படு வேகமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. நெல்சன் கொடுக்கும் ஒன் லைன் எல்லாம் நன்றக தான் இருக்கிறது, ஆனால் அது சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுக்கு சரி.
விஜய், ரஜினி போல ஆட்கள் எல்லாம் கையில் கிடைத்தால் சிவகார்த்திகேயன் படத்துக்கு போடும் அந்த effort பத்தாது. ஏனென்றால் கதையை இவர்கள் தாங்கிப்பிடிப்பது மட்டும் அல்லாமல் அந்த கதையும் பெரிய நடிகர்களை தாங்கிப்பிடிக்க வேண்டும். இது இரண்டும் இருந்தால் தான் அந்த படம் ஹிட் அடிக்கும். பீஸ்ட் படத்தில் விஜய்யை விட்டு, வேறு டைர் 2 நடிகர்கள் நடித்திருந்தால் படம் வேற லெவெலில் ஹிட் ஆகி இருக்கும்.
விஜயின் அந்த மாசுக்கு அந்த கதை தாங்கவில்லை. தற்போது 169 பட வேலைகள் பயங்கரமாக சென்று கொண்டிருக்க, ரஜினி 170th படத்திற்கான இயக்குனரையும் சூஸ் செய்து விட்டாராம். ஆம், சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி தான் அந்த படத்தின் இயக்குனர் என்று சொல்லப்படுகிறது. டான் படமே கடைசியில் இருந்த அந்த எமோஷன் காட்சிகள் மற்றும் அனிருத்தின் இசையினால் தான் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே அப்ரோச்சுடன் ரஜினி படம் செய்ய போனார் என்றால் fail தான் ஆகும், அதனால் நல்ல கதையை அவருக்கேற்றவாறு காட்சிகள் ரெடி செய்ய வேண்டும். மேலும் இந்த படத்தில் அரவிந்தஸ்வாமி வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளாராம். லைக்கா நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கிறது என்பது கூடுதல் தகவல்.