ஜெயிலர் படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால். தெறி சம்பவம். ஜெயிலர் படத்தின் அதிகாரபூர்வ போட்டோ வைரல்.
நல்ல performer யாரு னு ஒரு பஞ்சாயத்து போயிட்டு இருக்கு. இதுல நான் சொல்ல வருவது ஒன்னு தான் நிகழ்கால இந்திய சினிமாவின் சிறந்த நடிகன் தனுஷ் தான். ஆனா GOAT எப்பவுமே ஆண்டவர் தான். அதுக்கு அப்ரோ மோகன்லால், மம்முக்கா, விக்ரம். சமகாலத்தில் வாழும் மிகப்பெரிய நடிகன் - மோகன்லால் என்று சொன்னால் மிகையாகாது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இணைந்தார் மலையாள நடிகர் மோகன்லால். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம். அந்த போட்டோ தான் தற்போது இணையத்தில் வைரல். இரண்டு மாசான நடிகர்கள் ஒன்று சேரும்போது அந்த படம் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். நெல்சன் சம்பவம் யா.
நெல்சன் ஜெயிலர் படத்தை செம்மையா செதுக்கிட்டு இருப்பார் என்று தான் தோன்றுகிறது. ரஜினிக்கு இப்போ முக்கியமா ஒன்னு தேவை. ஒரு மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர். கண்டிப்பா இந்த படம் தான் அந்த பிளாக்பாஸ்டர் படம். கன்னட சூப்பர்ஸ்டார், மலையாள சூப்பர்ஸ்டார், இந்தியாவின் சூப்பர்ஸ்டார் ஒரே படத்தில். சும்மா screen திரை தீப்பிடிக்கும். இவங்க எல்லாருமே ரஜினி கூட இணைந்து படம் பண்ண காரணம் அவர் மேல் இருக்கும் அன்பு தான்.
பீஸ்ட் படம் இயக்குனர் நெல்சன்க்கு மறக்கவேண்டிய கசப்பான உண்மை. அந்த படத்தில் அவர் பண்ணிய தப்பு எல்லாம் மறந்து, இந்த படத்தில் அவர் யாரென்று மீண்டும் நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஒரு படத்துக்கு ஸ்கிரிப்ட் நன்றாக இருந்தால் போதும், அந்த படத்தின் திரைக்கதை எப்படியாவது ஒர்கவுட் ஆகிவிடும். ஆசிட் டெஸ்ட் மாதிரி நெளசானுக்கு, சூப்பர்ஸ்டார் உங்க மேல வெச்ச நம்பிக்கையை காப்பாத்திடுங்க.