எவ்ளோ பெரிய விஷயம் அவர் பண்ணது. ஜெயம் ரவிக்கு அவ்வளவு சந்தோசம். வேற என்ன வேணும் அவருக்கு.

Rajini jayam ravi full report

ஒரு துறையில் நம்ம வேலை செய்கிறோம் என்றால், நம்ம சாதிக்க அவ்ளோ கடுமையா உழைப்போம். ஜெய்ச்சும் விடுவோம் ஆனால் நமக்கு எண்டு திருப்தி கிடைக்கும் என்றால், நம்மளோட சீனியர்ஸ் நம்ம பாராட்டும் போது. அடடா.. சூப்பர் நல்லா பண்ணிருக்கீங்க.. இன்னும் சிறப்பா பண்ணுங்க என்று சொன்னால் போதும். காலில் ரெக்கை காட்டியது போல இன்னும் கடுமையாக உழைக்க ஆரம்பித்து விடுவோம்.

காசு பணம் எப்போதுமே பெருசு கிடையாது, இதுபோல சில விஷயங்கள் தான் நம்மை திருப்தி படுத்தும். அவர் அப்படி சொல்லிட்டார் என்று நாம் நமது நண்பர்கள், வீட்டிலிருப்பவர்களிடத்தில் சொல்லுவது தான் நமக்கு சந்தோசமே தவிர காசு பணம் அல்ல. அப்படியொரு பரட்டை தான் ஜெயம் ரவி பெற்றுள்ளார். பெற்றது நம் சூப்பர்ஸ்டார் இடத்திலிருந்து. ரஜினியும் எதாவது நல்ல படங்களை பார்த்தால் அழைத்து பாராட்டாமல் இருக்க மாட்டார்.

ரஜினியே கூப்பிட்டு பாராட்டிவிட்டால் சினிமாவே கூப்பிட்டு பாராட்டியதற்கு சமம். அதை தான் ஜெயம் ராவி, வார்த்தைகளால் சொல்ல சிரமப்பட்டுள்ளார். இருந்தாலும் “That 1 minute conversation made my day, my year and added a whole new meaning to my career. Thank you Thalaiva for your kind words & childlike enthusiasm. I’m overwhelmed, humbled & blessed to know you loved the movie & my performance 🙏🏼 @rajinikanth sir”.

முதலில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்திற்கு எப்படி ஜெயம் ரவி செட் ஆவார், அவர் வாய்ஸ் எப்படி ஒரு ராஜ கம்பீரத்தை கொடுக்கும் என்றெல்லாம் விமர்சனம் இருந்தது. ஆனால் படம் வெளியான பின் அப்படி ஒரு விமர்சனம் கூட அவரைப்பற்றி நெகடிவ்வாக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போவே ஒரு நடிகராக அவர் ஜெய்த்துவிட்டார்.

பொன்னியின் செல்வனே பாகம் 2க்கு வெறித்தனமான வைட்டிங்.

Related Posts

View all