இந்த குணம் தான்.. காந்தாரா நாயகனை வீட்டுக்கே அழைத்து விருந்து வைத்த தலைவர் ரஜினிகாந்த். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Rajini meets kanthara hero photos

காந்தாரா படம் எப்போது தமிழில் ரிலீஸ் ஆனதோ அப்போது முதல் பெரிய வரவேற்பு இந்த படத்துக்கு கிடைத்தது. படத்தின் இயக்கம் மற்றும் உருவாக்கிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த திருப்தி மனதில் ஏற்பட்டது. முன்பு 80’களில் கன்னட திரையுலகம் பல விருதுகளை பெற்று வந்தது. அந்த நிலை மீண்டும் திரும்புவதை போல் உள்ளது. அதற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’. தெரிந்ததை விட தெரியாதது அதிகம். இதை சினிமாவில் வேறு யாராலும் சொல்லியிருக்க முடியாது காந்தாரா திரைப்படம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது என்று காந்தாரா படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு. பாராட்டியதோடு மட்டும் அல்லாமல் அந்த படத்தின் நாயகரை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல்.

Rajini meets kanthara hero photos

ரஜினியிடம் இருக்கும் நற்குணமே, ஒரு படம் பார்த்தால் அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தால் உடனே படக்குழுவினரை அழைத்து பாராட்டிவிடுவார். பாராட்டுவது மட்டும் அல்லாமல் அந்த படம் அவருக்குள் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று மனதார வெளிப்படையாக கூறுவார். ரஜினியே சொல்லிட்டார் இந்த படத்தை பார்க்கலாமே என்று பார்க்கும் ரசிகர்கள் அதிகம். விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை அனைவரின் படங்களையும் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளது அந்த படக்குழுவினருக்கு ஒப்பற்ற மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு வரை நம் தமிழ் திரையுலகை சார்ந்தவர்கள் சார்பில் வெளியிடப்படும் திரைபடங்கள் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டும் விதத்தில் மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் தற்போது மற்ற மொழியை சார்ந்தவர்கள் வெளியிடும் திரைப்படங்கள் தமிழகத்தில் நல்ல வரவேற்பைபெற்று பாராட்டும் நிலைக்கு மாறியுள்ளது. பொன்னியின் செல்வன் படம் மட்டும் வரவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் தமிழ் சினிமா?

Latest Photos:

Related Posts

View all