ரஜினியின் அந்த பேச்சு.. விழுந்து விழுந்து சிரித்த ஐஸ்வர்யா ராயும், விக்ரமும்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Rajini ponniyin selvan speech

நேற்று நடந்த பொன்னியின் செல்வன் ஆடியோ லன்ச் விழாவில் தமிழ் சினிமாவின் துருவங்களான உலகநாயகனும், சூப்பர்ஸ்டாரும் கலந்து கொண்டனர்.

அப்போது இருவரும் மணிரத்னதுடன் வேலை செய்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ரஜினி பேசியது அனைவரையும் என்டேர்டைன் செய்தது. சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் அனைவரும் அந்த காமெடியான பேச்சை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தனர்.

அவர் பேசியது:

80ஸ் ல குமுதம் பத்திரிகையில் ஒருவர் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு யாரு பொருத்தமா இருப்பாங்கன்னு கேட்டதுக்கு நம்ம ஜெயலலிதா அவர்கள் ‘ரஜினிகாந்த்’னு போட்ருந்தாங்க. அப்புறம் தான் படிக்கச் ஆரம்பிச்சேன். கல்கி இப்போ இருந்திருந்தா கால்ல விழுந்துருப்பேன்.

பொன்னியின் செல்வன் பற்றி ஒரு சின்ன கதை. எல்லாரும் இந்த புக்கை படி படின்னு சொன்னாங்க. என்னோட பழக்கம் என்னென்ன எவ்வளவு பக்கங்கள் இருக்கும்ன்னு கேப்பேன். 250, 300னா ஓகே. 350னா நோ நோ நோ.

Rajini ponniyin selvan speech

பொன்னியின் செல்வன் எவ்ளோ பக்கங்கள்ன்னு கேட்டேன். ஐந்து பாகங்கள் 2000 பக்கம்ன்னு சொன்னாங்க. அட போயான்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

நா நடிக்கும் போது எல்லார்த்துக்கும் ஒரு ஸ்டாக் expression வெச்சுப்பேன். ரொமான்ஸ் பண்ண, எமோஷன் எல்லாருக்கும். அதெல்லாம் பண்ணா மணி சார் ஒத்துக்க மாட்டீங்கிறாரு. பீல் பீல்ன்னு சொல்றாரு.

நம்ம கதையெல்லாம் எடுடா வண்டியா, போடுடா அவனை.. இந்த மாதிரி பேசுறவனை கூப்பிட்டு பீல் பீல்ன்னு சொன்னா என்ன பண்றது..

Rajini ponniyin selvan speech

Rajini ponniyin selvan speech

Viral Video:

Related Posts

View all