அதான் அவர் தலைவர். கர்நாடக மாநிலத்தில் ஓங்கி ஒலித்த "என்னை வாழ வாய்த்த தெய்வங்களான தமிழ் மக்களே.." ரஜினி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Rajini puneeth rajkumar award video viral

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சென்ற நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உடன் சந்திப்பு.

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது. புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினியிடம் விருது வழங்கப்பட்டது; கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர். விருதை வழங்கினர்.

‘அப்பு’ புனித் ராஜ்குமார்… கடவுளின் குழந்தை. அனைவரும் சகோதரர்களாக, சாதி மத பேதமின்றி, ஒன்றாக மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்க வேண்டும் என ராஜ ராஜேஷ்வரி, அல்லா,ஜீசசை வேண்டிகொள்கிறேன். மழை பெய்யுது இப்ப நான் அதிகம் பேசி உங்கள மழையில் கஷ்படுத்த விரும்பல. கர்நாடகாவில் தமிழ் மக்களும் வாழுறாங்க என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு நன்றி வணக்கம் என்று ரஜினி அவர் உரையை முடித்தார்.

Rajini puneeth rajkumar award video viral

கர்நாடகாவில் கன்னட ராஜ்யோத்சவா நாளில் பிறப்பால் கன்னடராக, கர்நாடகாவில் இருந்து வந்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று கலந்து கொள்கிறார். தமிழ்நாட்டில் வாழும் தமிழை தாய்மொழியாக கொண்ட ஒரு நடிகர் கூட தமிழ்நாடு நாள் வாழ்த்து சொல்லவில்லை என்று ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதற்கு பதிலடியாக தான், நானும் தமிழன் தான் என்று உணர்த்தும் வண்ணம் “என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு நன்றி” என்று கர்நாடகாவில் சூளுரைத்தார் ரஜினி.

Video:

Related Posts

View all