ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியா நீலாம்பரி? லேட்டஸ்ட் அப்டேட் போட்டோஸ் வைரல்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் படப்பிடிப்பு நாளை துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர்ஸ்டார் இந்த மாதம் 16ம் தேதி அல்லது 22ம் தேதி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியான தகவல்.
ரஜினிக்கு படையப்பா படத்தில் வில்லியாக மிரட்டிய ரம்யா கிருஷ்னன் இந்த படத்திற்கும் நடிக்கவுள்ளார். வில்லியா இல்லை ஜோடியா என்று தெரியவில்லை. பீஸ்ட் படத்தின் சுமார் விமர்சனங்கள் நெல்சனை வாட்டி வதக்கியுள்ளது.
அதனால் கண்டிப்பாக இந்த படத்தின் மூலம் comeback கொடுக்கவேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார். கண்டிப்பாக ஒரு பிரேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே படத்தில் பிரியங்கா மோகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரம்யா கிருஷ்ணன் தற்போது விஜய் தேவரகொண்டாவின் பான் இந்தியா படமான லைகர் படத்தின் ப்ரோமோஷன்-ல் மிகவும் பிசியாக உள்ளார். ஏற்கனவே இவங்க டீசரில் மிரட்டியதை நாம் கண்டோம். படம் பார்க்க மரண வைட்டிங்.