என் தலைவன்கிட்ட இருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைக்க நீங்க தான் காரணம். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சிவகார்த்திகேயன் எவ்வளவு பெரிய சூப்பர்ஸ்டார் ரசிகர் என்பது அனைவர்க்கும் தெரிந்த உண்மை. யாருதான் அவரின் ரசிகர் இல்லை. ஆனால் சிவா போல அவரை அடிக்கடி சந்திக்கும் பாக்கியம் சில நடிகர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் எப்போதுமே சூப்பர்ஸ்டார் ரசிகர்களிடம் சிவாக்கு எப்போதுமே ஆதரவு இருக்கும். சமீபத்தில் நடந்த பிரின்ஸ் ஆடியோ விழாவில், டான் படத்தை பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டார் என்ன சொன்னார் என்று கூறியிருப்பார் அதுவும் அவரோட ஸ்டைலிலேயே.
ரஜினிக்கிட்ட இருக்கும் குணம் என்னவென்றால் நிறைய படம் பார்ப்பார். பார்த்த படங்கள் அவருக்கு பிடித்திருந்தால், உடனே அவரைகளை அழைத்து பாராட்டி அவங்களுக்கு ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்துவார். சூப்பர்ஸ்டார் ரஜினியே நம் படம் சூப்பரா இருக்கான் சொல்லிட்டாரு, வேற என்ன வேணும் அந்த நடிகருக்கு. இது ஆரம்பித்து இப்போது இல்ல, மிக நீண்ட நாட்களாகவே அவர் அப்படிதான்.
வரும் 21ம் தேதியன்று வெளியாகும் பிரின்ஸ் படம் தான் சிவாக்கு முதல் தீபாவளி ரிலீஸ். இந்த ஒரு தருணத்தை தான் எப்போதுமே நடிகன் ஆன பின் அனைத்து நடிகர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பர். அதாவது தீபாவளிக்கு நம்ம படம் ரிலீஸ் ஆயிடணும்ப்பா என்று.இந்த தேதியை கண்டிப்பாக சிவா மறக்கமாட்டார், மறக்கவும் முடியாது. சிவா இதில் பயங்கர ஸ்டராங்கோ அது தான் இந்த படம் முழுக்க இருக்கப்போகிறது. இயக்குனர் தெலுங்கு என்பதால் கொஞ்சம் மேக்கிங்கில் தெலுங்கு வாடை அடிக்கலாம். ஆனால் கூட படம் முழுவதும் பாண்டிச்சேரியில் எடுத்ததால் அது கவர் ஆகிவிடும். பூக்கிங்ஸ் ஓபன் ஆயிடுச்சு. டிக்கெட் முடிவதற்குள் வாங்கிக்கோங்க.
இப்போ ரஜினி சிவா கிட்ட அப்படி என்ன சொன்னார் என்று இந்த காணொளியை பார்த்து தெரிஞ்சிக்கோங்க.
Video:
#Thalaivar’s compliment to his ardent fan #SK 🥳🥳 pic.twitter.com/P5YXcaBMVy
— Venkatramanan (@VenkatRamanan_) October 17, 2022