உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற ரஜினிகாந்த். கலவர பூமியான இணையதளம்.

Rajini yogi meet video

‘ஜெயிலர்’ பார்க்க வராத உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத். முதலில் யோகி அதியநாத் ரஜினியுடன் சேர்ந்து படம் பார்க்க போகிறார் என்று சொல்லப்பட்டன. கடைசியில் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. வருகை தந்த உ.பி துணை முதல்வரும் அலுவல் நிமித்தமாக பாதியிலேயே கிளம்பினார். இது எந்த மாதிரி பொலிடிகல் கேம் என்று தெரியவில்லை.

ஏன் பலரும் இவ்வளவு அதிர்ச்சியாகிறார்கள்..? ரஜினிகாந்த் அவர்கள், தீவிர வலதுசாரி சனாதன சங்கிகள் காலில் விழாமல் இருந்தால் தான் அதிர்ச்சியாக வேண்டும்… ஆச்சர்யப்பட வேண்டும் என்று அவர்மீது அரசியல் ரீதியாக பல விமர்சனங்கள் வருகின்றன. ரஜினி ரசிகர்களே பலர் இந்த செயலால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உபி முதல்வர் யோகி ஆதித்யா காலில் விழுந்து ..! கும்பிட்டார் என்றால்..? பாருங்கள்

மதவாதத்திற்கு எவ்வளவு சுதந்திரம் தமிழகத்திற்கு தலைக்குனிவு என்ற கருத்தும் பரவி வருகிறது.

Rajini yogi meet video

கடவுள், தாய், தந்தை ஆகிய மூவரின் கால்களில் விழலாம். பணம், பதவி, புகழ், அதிகாரம் இருப்பவர்கள் காலில் விழவேண்டிய அவசியம் இல்லை என்று ஒருமுறை ரஜினிகாந்தே பேசியுள்ளார்.

ரஜினி ரசிகர்கள் சொல்வதையும் ஏற்க வேண்டும்: மக்கள் பிரதிநிதியா? அரசியலமைப்பு பதவியாளரா? அரசியல் கட்சித்தலைவரா? தமிழக அரசு ஊழியரா? தமிழக அரசின் தூதுவரா?

இதில் எதுவுமே இல்லை! அவர் ஒரு நடிகர். அவர் யார் காலில் விழுந்தாலும் அது அவரின் தனியுரிமை.

அவரை தமிழ்நாட்டின் முகமாக பார்த்து அவரை குறை சொல்வதே அறிவற்ற செயல்!

Video:

Related Posts

View all