ரஜினி இருக்கும் வரை அவர் தான் நம்பர் 1. வேற எவனும் இல்லை.. பத்திரிகையாளரை மிரட்டிய ரஜினி ரசிகர். வீடியோ வைரல்.
பத்திரிகையாளர் பீஸ்மி அனைவர்க்கும் தெரியும். நீண்ட நாட்களாக சினிமா செய்திகள் மற்றும் பல அரசியல் விமர்சனங்களில் அவரை பார்த்திருப்போம். இவரின் கருத்துக்கள் எப்போதுமே சர்ச்சையாக தான் இருக்கும். அதுவும் ரஜினி என்று வந்துவிட்டால் அது என்னமோ தெரியவில்லை எப்போதுமே கொஞ்சம் அவரைப்பற்றி நெகட்டிவா பேசுற மாதிரியே இருக்கும்.
இப்போ என்ன பிரச்னை என்றால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று ஆனதும் அவர் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் மிகவும் கடுமையாக உள்ளது. ஏனெனில் முன்னாடி அவர் தான் நம்பர் 1 என்று சொல்லிவந்த ஊடங்கங்கள், ஊடக நண்பர்கள் அனைவரும் இப்போது அவரை நம்பர் 1 என்று சொல்லவில்லை. இவர்களுக்கு கிடைத்த இன்னொரு பெயர் விஜய்.
விஜய் தான் அடுத்த இடத்தில இருந்தார், எல்லா ஊடகமும் இப்போது விஜய் தான் பிஸ்னஸ் லெவெலில் நம்பர் 1 என்று சொல்லி ரஜினியை பின்னுக்கு தள்ளி தான் பேசுகிறது. இதை ஒரு புறம் பயங்கரமாக விஜய் ரசிகர்கள் என்ஜாய் பண்ணி வந்தாலும், இன்னொரு சில ரசிகர்கள் அதாவது ரஜினி ரசிகர்கள் விஜயை தான் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.
ஆனால் ரஜினியே ஒரு இடையில் சொன்னதை தான் quote பண்ணி பேசிவருகின்றனர். அவங்க சொல்வது என்னவென்றால் காலம், நேரம் இப்போ இன்னோருத்தருக்கு வந்திருக்கு என்று மேடையில் ரஜினியே பேசினார். அது தான் எதார்த்தம். விஜயை சுற்றி அவ்வளவு பிசினஸ் இருக்கும்போது, அதுமட்டுமில்லாமல் அவருடைய தோல்வி படம் பீஸ்ட் கூட டாப் 5 பாக்ஸ் ஆபிசில் இருக்கிறது என்றால் அவர்தானே நம்பர் 1 என்று ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள்.
ஆனால் இவர்கள் சண்டையில் யாரோ நல்லா குளிர் காய்யிறாங்க என்று மட்டும் நன்றாக தெரிகிறது.
--
Video:
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 1, 2023