என்ன மூவ்மென்ட் அது சும்மா அப்படி இருக்குது தீயா. ரம் பம் பம் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

RAM bam bam video viral

நம்ம தனிமைல இருக்கும் போது நமக்கு நண்பன்-னா அது யுவன் இசை தான். எல்லோருக்கும் life ல ஒரு turning point வரும். அப்டி என் வாழ்க்கையோட turning point யுவன் இசை. இந்த வாழ்க்கையை ரசிச்சு வாழ இசை எவ்ளோ முக்கியம்னு உணர ஆரம்பிச்சது யுவன் இசை மூலமாதான். அதுக்காக எப்பவுமே யுவனுக்கு நன்றிக்கடன் பட்ருக்கேன்! எனக்கு தெரிஞ்சி இளையராஜாக்கு அடுத்து பின்னணி இசை மூலமா உருக வச்சது #யுவன் இசை மட்டுமே.

அதே ரத்தம் அப்படி தான் இருக்கும் என்று ஒரு வசனம் வரும். அது இளையராஜாக்கும் யுவனுக்கு அப்படி பொருந்தும். இருவருமே அவங்க அவங்க ஜெனெரேஷன்-ல் இசை அரக்கர்கள் தான். யுவன் பார்ம் அவுட் என்றெல்லாம் எப்போதுமே சொல்ல முடியாது. என்னத்த மற்ற இசையமைப்பாளர்களின் இசை தற்போது ட்ரெண்ட் ஆனாலும் இன்றைய தேதியில் மீண்டும் மீண்டும் கேட்பது லவ் டுடே படத்தில் வரும் ‘என்னை விட்டு’ பாடல் தான்.

RAM bam bam video viral

தற்போது அந்த லிஸ்டில் இன்னொரு பாடல் இணைந்திருக்கிறது. இந்த பாடலை இளையராஜா பாடல் என்றும் சொலலாம், யுவன் பாடல் என்றும் சொல்லலாம். இளையராஜா அன்று போட்ட ரம் பம் பம் பாடலை இன்று யுவன் ரீமிக்ஸ் செய்துள்ளார். காபி வித் காதல் படத்துக்கு இந்த பாடல் ஒரு சிறந்ததாக ஆரம்பம் முதலே அமைந்தது. இந்த பாட்டு படத்தில் வரும் மற்ற பாடல்களை விட மிகவும் கலர்புல்லா இருக்கும். எல்லாருமே ஒரு ஜாலி மூடில் இருப்பாங்க.

இந்த பாடலிலும் யுவன் அவரோட கைவரிசை காட்டிருப்பாரு. சும்மா ரீமிக்ஸ் பன்றோம் அப்டின்னு இல்லாம, சில பின்னணி டிரம்ஸ் எல்லாம் போட்டு ஒரு celebration ஜாலி மூடு கொடுத்திருக்காரு. ஆந்த வீடியோ பார்க்க அவ்வளவு சந்தோசமா இருக்கு. ஏனென்றால் அப்படி ஒரு டோன் தான் அந்த பாடல் செட் செய்கிறது.

Video:

Related Posts

View all