ராமராஜன் வெறித்தனம்.. 80களில் மாட்டை மேய்த்து பால் கறந்த கைகள்.. இப்போது துப்பாக்கிய தூக்கிருக்கு. வீடியோ வைரல்.

Ramarajan is back video viral

சாமானியன் படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கி கொண்டிருக்கிறது, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. படம் கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தை நினைவுகூர வைக்கிறது.

படத்தில் மேதகு பிரபாகரன் அவர்கள் குறியீடு புத்தகம் மிக அருமை. கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஒருத்தர் கையில் சேகுவேரா புத்தகம், நூலக மேஜையில் போர் கண்ட சிங்கம் பிரபாகரன் புத்தகம், ஏதோ விஷயம் இருக்கும் போல இந்த டீசர் படத்தோட கதையின் ஒரு சதை.

15, 20 வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்த பங்காளி இவருக்கு சரியாக சூட் ஆகுதுல்ல. படம் எப்போ தொடங்குனாங்க,எப்போ முடிச்சாங்கனு தெரியல, திடீர்னு டீசர் வரும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் நேற்று தான் முதல் பார்வையே ரிலீஸ் ஆனது.

80களின் இறுதியில் சூப்பர் ஸ்டாருக்கு நிகராக வலம்வந்தவர் ராமராஜன். தமிழ் சினிமாவில் முதல் முதலில் 1 கோடி சம்பளம் வாங்கியவர் என்று இவரை பற்றி பேசும்போது பெரியவர்கள் கூறுவது உண்டு. ஆனால் எந்த படத்திற்கு வாங்கினார் என்பது தெரியவில்லை. ராமராஜனுக்கென்றே ரசிகர்கள் பட்டாளம் இருந்தது ஒரு காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

College படிக்கும் போது இவரை பற்றி நகைச்சுவையாக நண்பர்கள் சொன்னது ஞாபகம் வந்துவிட்டது. இவரின் சண்டை காட்சிகளை வைத்து கிண்டல் செய்தவர்கள் ஏறலாம். தற்போது இந்த வசனம் தான் நினைவுக்கு வருகிறது. “உன்ன டம்மி பீசுனு நினைச்சன் இப்படி கில்லி மாறி வந்துட்டியேனே”. நாயகன் மீண்டும் வரார் எட்டுதிக்கும் பயம்தானே. ஆரம்பிக்கலங்களா??

என்றும் மக்கள் நாயகன் ராமராஜன் இரை பற்றி 2k கிட்ஸ்க்கு தெரிந்துருக்க வாய்ப்பில்லை. இந்நேரம் கூகிள் செய்ய தொடங்கியிருப்பர் ஏனென்றால் டீசர் தற்போது இணையதளத்தில் வேற லெவெலில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Ramarajan is back video viral

ரொம்ப நல்லயிருக்கு இருக்கு பல வருடங்களுக்கு பிறகு இராமராஜன் அவர் திரையில் பார்க்கிறது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. படத்தில் மேலும் கவனிக்க படவேண்டிய இருவர் ராதாரவியும், எம்.எஸ். பாஸ்கரும். ராமராஜனை விட சைலண்டா ஸ்கோர் செய்தது அவர்கள் இருவர் தான்.

நடிகர் ராமராஜன்னை அதிக நாள் கழித்து திரையில் காண அவலோடு காத்துக் கொண்டிருக்கிறோம், படம் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

Video:

Related Posts

View all