ராமராஜன் இஸ் back.. இப்படி ஒரு மிரட்டல் போட்டோ எதிர்பார்கல. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

ராமராஜன் என்று சொன்னாலே அந்த காலத்தில் அவரும் ஒரு வெள்ளி விழா நாயகன் தான். அவர் நடித்த மண் சார்ந்த கதைகள் எல்லாம் எவ்வளவு சூப்பர் ஹிட் ஆனது என்பதை பற்றி பேசாமல் இருக்க முடியாது.
எப்படி தற்போது விஜய், அஜித், ரஜினி, கமலுக்கு எல்லாம் ஒரு தனி ரூட் இருந்ததோ, அவருக்கும் அதேபோல் ஒரு ரூட் இருந்தது. நடித்த படங்கள் நிறைய சூப்பர் ஹிட் ஆனது. அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது.

ஆனால் எப்படி ஒரு நாயகனுக்கு ஒரு downfall இருக்குமோ, அதேபோல் இவருக்கும். இவர் பின்னர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. அந்த காரணத்தினாலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சினைகளாலும் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
இப்போது மீண்டும் பெரிய திரையில் அவரை காண இருக்கிறோம். ராமராஜன், ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர் இணைந்து நடிக்கும் அந்த படத்திற்கு ‘‘சாமானியன்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த முதல் பார்வை தான் சமூக வலைத்தளங்களில் வைரல்.

போட்றா bgm “நாயகன் மீண்டும் வரார்…..”
