என்ன மாமா.. நீங்க ஆடுனா ஊரே ஆடுமே.. அதுக்கு ஒரு அடிய போட்டு உடுவோம். தளபதி குத்து ரஞ்சிதமே லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தளபதி விஜய்க்கு இவ்வளவு நாள் ஆகியிருக்கு இந்த மாதிரி ஒரு flashy சாங் பண்ண. கடைசியில் விஜய் ரசிகர்களுக்கு பொங்கலுக்கு செம்ம விருந்து காத்திருக்கு. அம்மாடியோவ் என்ன டான்ஸ், என்ன பீட்டு, என்னா pair ரெண்டு பேரும். விஜய்க்கு நீண்ட நாள் க்ளிக் ஒரு அழகான pair அமைஞ்ச மாதிரி இருக்கு. ரஷ்மிக்கா ஏற்கனவே மிகப்பெரிய தளபதி பேன், ஒவ்வொரு சீன், டான்ஸ் மூவ்ஸ்ல பாட்டு நல்ல வரணும் அப்டின்னு அவங்க பட்ட கஷ்டம் புரியுது.
தளபதி வாய்ஸ்ல ஒரு பாட்டு வருதுன்னாலே அது செம்ம ஹிட்டு தான், அதுவும் இந்த பாட்டு தமன் செம்ம வேகமா இருக்கனும் அப்டின்னு பீட்ஸ் போட்டு கொளுத்தி விட்டிருக்காரு. தமன்னுக்கும் விஜய்க்கு பாட்டு போடணும் என்பது நீண்ட நாள் கனவு, அது தான் இன்ணைக்கு 12 மணிக்கு ட்வீட்டு “இன்னைக்கு தான் எனக்கு தீபாவளி” என்று பதிவு செஞ்சிருக்காரு, அந்த அளவுக்கு அவர் excited.
திரையரங்கில் பாட்டு சும்மா கிழிய போகுது, டான்ஸ் ஆடி கொண்டாட போறாங்க. படத்துல மியூசிக் பற்றி இனி கவலை பட தேவையில்லை. இந்த முதல் சிங்கிள்லே காய் உணர்த்திருச்சு, எப்படியும் மத்த பாட்டும் வேற லெவெலில் இருக்கப்போகுது. இந்த பாட்டை பொறுத்தவரை இன்னொருத்தங்களுக்கு பாராட்டு தெரிவிக்கணும் என்றால் அந்த பொண்ணு வாய்ஸ்க்கு தான். அவங்க பேரு மானசி, சும்மா கொளுத்தி விட்டிருக்காங்க.
விவேக் தான் இந்த பாட்டுக்கு லிரிக்ஸ். விஜய்க்கு இவர் எழுதின எல்லா பாடும் செம்ம ஹிட்டு, அதேபோல் இந்த பாட்டும் அமைஞ்சிருக்கு. மேலும் இந்த படத்தில் அவர் screenplayக்கும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணிருக்காரு. படம் கொஞ்சம் பிசிறு தட்டினாலும் சிரமம் ஆய்டும் ஏனென்றால் கூட துணிவு படமும் வருது. துணிவுக்கும் அப்படி தான்.
ரஞ்சிதமே வீடியோ: