ரெண்டு பேரும் லவ்வு தான் பண்றாங்க போல? ஜாலியா மால்தீவ்ஸ்ல அப்படியே.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Rashmika vijay deverakonda video viral

ரஷ்மிக்கா மந்தன்னாவும், விஜய் டேவரகொண்டாவும் ஒரு சில படங்களில் ஒட்டுக்கா நடித்து பிரபலம் அடைஞ்சவங்க. இவங்களோட on screen கெமிஸ்டரியை விட, ஆப் screen கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்கள் அதிகம். படத்தின் ப்ரோமொக்காக அவங்க கொடுக்கும் இன்டெர்வியூ, மக்களுடன் உரையாடுவது போன்ற விஷயங்களுக்கு பெரிய பேன் பேஸ் இருக்கும். மற்ற ஹீரோயின்களுடன் விஜய் நடிக்கும் போது கூட இவ்வளவு நன்றாக கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆயிருக்காது, ஆனால் இவங்க ரெண்டு பெரும் வேற லெவல்.

அதனால் இண்டஸ்ட்ரில என்ன பேசிக்கிறாங்கன்னா, இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க, அடிக்கடி டேட் போகிறார்கள் என்று பேசிக்கொள்வார்கள். தற்போது அந்த பேச்சை உறுதி செய்யும் வண்ணம், இருவரும் vacationகாக மால்தீவ்ஸ் போயிருக்காங்க. என்னதான் தனித்தனியே சென்றால் போய் சேரும் இடம் ஒன்று தானே என்று இருவரையும் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

லைகர் படகின் தோல்வி, விஜய்க்கு பெரிய மனஉளைச்சலை கொடுத்திருக்கு, அந்த படத்தினால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த காரணத்தினால் அவர் கொஞ்ச நாட்களுக்கு சமூக வலைத்தளங்களில் இருந்து கொஞ்சம் விலகியுள்ளார். ஆனால் அவர் ஒன்றை குறிப்பிட்டிருந்தார், இந்த படம் லாஸ் ஆனதால் அடுத்து அவர் நடிக்கும் படத்தை காசே வாங்காமல் நடித்து கொடுக்கிறேன் என்று. இந்த மனசு எல்லாம் யாருக்கு வரும்.

ரஷ்மிக்கா தற்போது தளபதி விஜயின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார், விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து நடித்துக்கொண்டே இருவருக்கும் இப்படியொரு பிரேக் தேவை.

Video:

Related Posts

View all