மௌனகுரு, மகாமுனி இயக்குனரின் அடுத்த மிரட்டல் படைப்பு.. ஆச்சரியப்பட வைத்த அர்ஜூன் தாஸின் “ரசவாதி” வீடியோ.

Rasvaaathi trailer video

தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம் என்றால் டாப் 10ல் கண்டிப்பா மௌனகுரு படம் இருக்கு. அருள்நிதியை ஒரு நடிகராக மட்டும் அல்லாமல் ஒரு நல்ல performer அந்தஸ்தை கொடுத்த படம் அது. மிகவும் வித்தியாசமான திரைக்கதை, அப்படி ஒரு படம் எடுக்க அந்த இயக்குனராலே கூட முடியாது. அவ்வளவு நல்லா இருக்கும்.

அந்த படம் 2011ம் ஆண்டு வந்துச்சு, அதற்குப்பின் அவர் 2019ம் ஆண்டு தான் அடுத்த படத்தை பண்ணினார். அந்த படம் தான் ஆர்யா சினிமா வாழ்க்கையில் மிகசிறந்த படம். படத்தின் பெயர் மகாமுனி. இந்த படத்தையும் மனுஷன் வசனம், கேமரா, இயக்கம் என்று எல்லா டிபார்ட்மென்ட் ஜொலிச்சிருப்பாங்க. இன்டென்ஸ் அவ்வளவு நல்லா இருக்கும். மகிமாவின் இன்னொரு பக்கத்தை காட்டிய படம்.

Rasvaaathi trailer video

அடுத்து மீண்டும் 8 வருடம் கேப் எடுத்துவிடுவார் என்று நினைத்தபோது நல்ல வேளையாக இன்னொரு படம் அர்ஜுன் தாஸ் மற்றும் தான்யாவை வைத்து ரஸவாதி. இவ்வளவு நல்ல முன்னோட்டத்தை இதுவரை நாம் பார்த்திருக்கமாட்டோம், அப்படியிருக்க. மனுஷன் எப்படி தான் இவ்வளவு சூப்பரா எடுத்துட்டு அமைதியா இருக்கார் என்று தெரியவில்லை.

இயக்குனர் சாந்த குமார் மௌன குரு மற்றும் மகாமுனி அற்புதமான படைப்பை தொடர்ந்து ரசவாதி.. நிச்சயமாக இதுவும் ஆன்மீகம் , அரசியல், சமூகம், மற்றும் மனிதனின் மற்றொரு பக்கம் என அத்தனையும் அழகாக காட்டும்.

இயக்குனர் சாந்தகுமார் அவர்களே மௌனகுரு ,மகா முனி இந்த இரு படமும் கதாநாயகன் உண்டான பாத்திரமாக நடிக்க விடாமல் அந்த பாத்திரமாக வாழ வைப்பிர் உங்கள் அடுத்தது படைப்புகளை உடனுக்குடன் வழங்குவிர்கள் என்ற நம்பிக்கை உள்ளது பின்னணி இசையில் தான் யார் என்று அழுத்தமாக பதிவு செய்ய போகிறார் (செய்து விட்டார்) தமன்.

Video:

Related Posts

View all