டைட்டிலில் ஜெயமோகனின் “கைதிகள்” சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது என்கின்ற வரி.. ரத்தசாட்சி மூவி review.
நக்சல்பாரிகள் பற்றி தவறான பார்வை வைத்திருக்கிறதா? நல்ல சினிமாவா என்றெல்லாம் குழம்பத் தேவை இல்லை. ஆனால், நிச்சயம் பார்க்கலாம் ரகம் இந்த ரத்தசாட்சி. நக்சல் இயக்கப் போராளிகளின் வரலாற்றைத் திரித்து பொய்யும் புரட்டுமாக அவதூறுக்குள்ளாக்கும் அற்பப் படைப்பே #ரத்தசாட்சி. நேர்மையற்ற இம்மாதிரிப் படைப்புகள் புறக்கணிக்கப்புள்ளாக்கப்பட வேண்டியவையே எண்டு பலர் கருத்து தெரிவிக்கின்றனர். படத்தை படமாக பார்ப்பது நல்லது.
படமாக பார்த்தால்: ரத்தசாட்சி - 2022 ( aha )
ஜெயம்மோகன் எழுதிய “கைதி” நாவல் ல இருந்து தழுவிய கதை.
நக்சலைட்டுக்கும், போலிஸ்க்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் படம்.
அருமையான கதைக்களம். வசனம் லாம்🔥 1980s மேக்கிங் செம💥 திரைக்கதையில இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
டைட்டிலில் ஜெயமோகனின் “கைதிகள்” சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது என்கின்ற வரி, படம் பார்த்து முடிக்கும் வரை உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு கதை எப்படி படமாக உருமாறுகின்றது எனும் ஆர்வமே. கைதிகள் கதை திரைப்பட வடிவில் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது. திரைக்கதைக்காக செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் மிகச் சிறப்பு. யானைக் காட்சி மிகைப்படுத்தலாக இருந்தாலும், அடுத்த காட்சியில் அதன் தேவை உணர்த்தப்பட்டு விடுகின்றது.
அனைத்துப் பாத்திரங்களும் மிளிர்கின்றன. அந்த அளவில் ஒரு படைப்பாக மிகுந்த திருப்தி தருகின்றது.
ஆனால்… கதைக் காலம் 1980. கதைக் களம் தர்மபுரி. தர்மபுரி மாவட்டம் மற்றும் அதையொட்டிய ஆந்திர எல்லையில் இருந்த நக்ஸல் இயக்கத்தினர் செயல்பாடு, போராட்டங்களின் பின்னணி, போலீஸ் நடவடிக்கைகள், மக்களின் நிலை, இரண்டு தரப்பிற்கும் மக்களின் ஒத்துழைப்பு என்று தேய்ந்து போகாத ஏராளமான உண்மைகளின் சாட்சியங்கள் இன்னும் இருக்கலாம்.
அப்படியான ஒரு காலத்தை புனைவாக ஒரு கதையாக்கி, அதைப் படமாக்கி, அதுவே உண்மை என்று பதித்துக்கொள்ள முடியுமா?
இந்தக் கதை மற்றும் கதையின் வாயிலான படத்தில் அந்த உண்மைகள் எந்த அளவு இருக்கின்றன? எனும் கேள்விகள்தான் அலையடித்துக் கொண்டிருக்கின்றன என்று ஈரோடு கதிர் எழுதியுள்ளார்.