ரத்தம் கொதிக்குது இந்த வீடியோ பார்க்கும்போது. ரத்தசாட்சி லேட்டஸ்ட் மிரட்டல் வீடியோ வைரல்
தமிழ் சினிமால கதை பஞ்சம் இருக்கு. ஆனா எழுத்தாளர்கள் நிறைய பேர் இருக்காங்க. சினிமால சுஜாதா, பாலகுமாரன், ஜெயமோகன் தவிர்த்து வேற யாருமே பெருசா பேசப்படலை. நடிக்கருக்கு 25 கோடி சம்பளம் குடுகிறதுல 1 கோடி எழுத்தாளருக்கு குடுத்தா தமிழ் சினிமாவையே புரட்டி போடும் படைப்புக்கள் கிடைக்கும் என்பது பெரும்பாலான சினிமா ரசிகர்களின் கருத்து. இந்த தோப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் பற்றி பார்க்க இருப்பதால், அவரின் சமீபத்திய பங்களிப்பு தமிழ் சினிமாவிற்கு என்பதில் இருந்து ஆரம்பிப்போம்.
“வணங்கான்”. அட்டகாசமான பவர்ஃபுல் டைட்டில். புத்தகம் படித்த பலர் மனசுக்கு நெருக்கமான கதை. இயக்குநர் பாலாவுக்கு வாழ்த்துக்கள். தலைப்பு மட்டுந்தான் கேட்டாராம்! ஜெயமோகன் உடனே ஒப்புக் கொண்டு அனுமதி தந்ததாக நெகிழ்ச்சியோடு சொன்னார். இந்தத் தலைப்புக்கான நியாயத்தை படம் நிறைவேற்றும் என நம்புகிறோம்.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய அறம் சிறுகதைகள் சிறுகதைகள் படிக்கச் ஆரம்பிச்ச பொழுது, அந்த சிறுகதை தொகுப்பு உண்மை மனிதர்களின் கதைகளை கொண்டுள்ளது ஒரு கதை நீங்க படிக்கச் ஆரம்பிச்சீங்கனா நீங்க அத விட்டு வெளியே வரமுடியாது அந்தளவுக்கு நம்மள அந்த கதையோடு பயணிக்க வச்சு இருப்பார். இவரைப்போல எழுத்தாளரை அடுத்த தலைமுறையில் பார்ப்பது கடினம்.
இந்தியன் 2 அரசியல் படம் ஷங்கரின் கதை, திரைக்கதை அதுக்கு நான் வசனம் எழுதியிருக்கேன், மக்கள் எதை விரும்புறாங்க எதை பார்த்து கொந்தளிக்கிறாங்க அத சொல்றது தான் படம் அதுவும் ஷங்கரின் அரசியல் கமலின் அரசியல், மிக பிரம்மாண்டமான படம், செட், பெரிய பட்ஜெட். ஜெயமோகன் எனக்கு விருப்பமான ஒரு எழுத்தாளர்களில் ஒருவர் எழுதிய இந்த கதை படமாக வருவதில் எனக்கு மகிழ்ச்சி.
என்ன புரியலையா. சமீபத்தில் பிரபல OTT தளமான ஆஹா நிறைய படங்கள், வெப் சீரிஸ் தயாரித்து வருகிறது. அப்படி எழுத்தாளர் ஜெயமோகனின் ஒரு கதை கூடிய விரைவில் திரையில் பார்கைருக்கிறோம். கண்ணா ரவி நடிக்கிறார். இவர் கைதி, மண்டேலா போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புது படத்தின் பெயர் ரத்தசாட்சி. அதிலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது.
வெறித்தனமா இருக்கு.
வீடியோ: