அவனுகள எதிர்த்து வீரச்சாவு சாவுறது ஆயிரம் மடங்கு மேல். ரத்தசாட்சி லேட்டஸ்ட் மிரட்டல் வீடியோ வைரல்.
உழைப்புச்சுரண்டலில் மிக மிக மோசமாக இருக்கும் இடம் கோவை. கல்வி கற்காதவர் அடிமை என்றால் கல்வி கற்றவர்கள் கொத்தடிமைகள் பிரபல அரசியல்வாதி நடத்தும் கல்லூரி ஒரு உதாரணம். முதலாளிகள் பண்ணையார் மன நிலையில் அதிகம் வாழ்வது இந்த பகுதியில் தான். சுமங்கலி திட்டம் என்று சுரண்டி திங்கும் சல்லிகள் என்று மக்கள் கடுங்கோபம்.
கம்யூனிசம் முதலாளிகளை ஒழிப்பை கூறவில்லை முதலாளித்துவ ஒழிப்பை பேசுகிறது. முதலாளித்துவம் என்பது உழைப்பு சுரண்டல். பன்னிரண்டு மணிநேர வேலை என்பதும் அதுதான் வேலையின்மையும் அதுதான். ஏழ்மை, சொத்து, தொழிலாளி, முதலாளி, தோழமை, ஆதிக்கம், கம்யூனிசம், முதலாளித்துவம், என உலகை இரண்டாக பிரித்துக்காட்டிய “பொதுவுடைமை சித்தாந்த பிதாமகன்” தோழர் கார்ல் மார்க்ஸ்சை நாம் இன்று நினைவு கூறுவோம்.
முதலாளின்னு ஒருத்தன் இருந்தாதான் தொழிலாளி இருக்க முடியும்ங்குறது முதலாளித்துவம். தொழிலாளின்னு ஒருத்தன் இருந்தாதான் முதலாளி இருக்க முடியும்ங்குறது கம்யூனிசம். நம்ம கம்யூனிஸ்ட்டா.? முதலாளித்துவவாதியா.? முதலாளி ஆக முயற்சி பண்ற கம்யூனிஸ்ட்.! சதுரங்க வேட்டை படத்தில் இந்த வசனம் வரும், எவ்வளவு எளிமையாக எல்லாருக்கும் புரியும்படி கூறியிருக்கின்றனர் பாருங்கள்.
இந்த படம் எல்லாம் ஒரு அளவுக்கு கம்யூனிசத்தை பற்றி பேசியுள்ளது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் ரத்தசாட்சி படத்தின் ட்ரைலர் அதற்கான போராட்டம் மக்கள் அடைந்த வலி, வேதனைகள், முதலீலையிகளுடன் கைகோர்த்து ஏழை எளிய மக்கள் வயிற்றில் அடித்த போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டகிறது. 1980களில் நடந்த கதை இது. அந்த மிரட்டல் ட்ரைலரை நீங்களே பாருங்க.
Video: