இளவரசி குந்தவையின் காதல் பார்வை வந்தியத்தேவன் மேல்.. அப்படியொரு லவ்வு.. பொன்னியின் செல்வன் வீடியோ வைரல்.
வெகு நாட்களுக்கு பிறகு ஒரு படத்தினுடைய அனைத்து பாடல்களையும் ரசிக்க வைத்தது பொன்னியின் செல்வனில் தான். அந்த காலத்துல இப்படி தான் நடந்துயிருக்குமோ என்று சற்று நம்மையே யோசிக்கவெச்சிடாங்க என்று தான் சொல்ல வேண்டும். படம் ரிலீஸ் ஆகி 500 கோடி வசூலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. படக்குழு ஒவ்வொரு பாடலாக தற்போது வெளியில் விட்டுக்கொண்டிருக்கிறது. ஷ்ரேயா கோஷல் குரலில் ராட்சச மாமனே பாடல் தற்போது இணையத்தில் வைரல்.
செயற்கைதனமாக அல்லாமல் அந்த காலத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தை மிகச்சிறப்பாக இசையிலும் காட்சியிலும் நடன அசைவுகளிலும் காட்சிப்படுத்தி , திரைக்கதையை விட்டு விலகாமல் இயக்கிய விதம் மிக அருமை. ஸ்ரேயா கோஷல் குரல் செவிகளில் ரிங்காரம். ஸ்ரேயா கோஷலும் ரகுமானும் சேர்ந்தாலே பாடல் வெற்றி தான் என்று மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. நம் கஷ்டங்கள், துன்பங்கள், யாவையும் மறந்து ஓர் புதிய புத்துணர்ச்சி தருவது இசையே அதிலும் இசைபுயலின் இசைக்கு எதுவும் ஈடாகாது.
வந்தியதேவன் மற்றும் வானதி கம்சன் மற்றும் கண்ணன் 😍 அருமையாக இருந்தது. ஆனாலும் அந்த பார்வையில் உள்ள தேடலை திரிஷா அழகாக காட்டியிருப்பார். யார் அவர், யாராக இருக்கும் என்று பாடல் முழுவதும் ஒரு தேடல். குந்தவை த்ரிஷாவை தவிர வேறு யார் பண்ணியிருந்தாலும் இந்தளவு நன்றாக இருந்திருக்காது.
மணிரத்னம், A.R. ரஹ்மான் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் பெருமை. இவர்கள்தான் தமிழ் சினிமாவை வடமொழியில் மொழிபெயர்த்தவர்கள். இவர்கள் இருவரும் அதற்கு ஒரு வழி வகுக்கவில்லை என்றால் நம்மளுடைய சிறப்பான திரைப்படங்கள் தமிழோடு நின்றிருக்கும். இப்போது எல்லாம் தமிழ் படங்களை விரும்பி பார்க்கின்றனர் என்றால் விதை இவர்கள் போட்டது.
Video: