Recent Crush! தனது ஒர்க்கவுட் வீடியோவை வெளியிட்ட லவ் டுடே பட நடிகை ரவீணா ரவி வீடியோ வைரல்.
ஒர்க்கவுட்டா இது? ஹார்ட்ல ஹீட்டேத்துற மாதிரி செம்ம டான்ஸால்ல இருக்கு. ஒர்க்கவுட் வீடியோவை(?) வெளியிட்டிருக்கும் ரவீணா ரவி. ரவீணா ரவி ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் நடிகையாவார். அவர் குரல் நடிகை ஸ்ரீஜா ரவி மற்றும் நடிகர்/பாடகர் ரவீந்திரநாதன் கிருஷ்ணன் ஆகியோருக்கு பிறந்தார்.
ராஜீவ் மேனன் இயக்கிய பல தொலைக்காட்சி விளம்பரங்களை தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்துள்ளார். சாட்டை படத்தின் மூலம் முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேச ஆரம்பித்தார்.
பிறகு அவர் ஒரு கிடாயின் கருணை மனு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வந்தவர் வெகு நாட்களுக்குப் பிறகு இயக்குனர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தில் நடித்தார். அதுவரை அடையாளம் தெரியாமல் இருந்த ரவீணா அத்திரைப்படம் மூலம் தெரிந்த முகமானார்.
சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கங்களில் தனது யோகா புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் தன் அழகு மற்றும் இளமைக்கான ரகசியத்தை எடுத்துரைத்தார். தற்போது செம்ம டைட் ஸ்கின்னி அவுட்பிட்டில் ஒர்க்கவுட் எனக் கூறிக்கொண்டு இடுப்பை வளைத்து வளைத்து டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். ஒர்க்கவுட்டோ டான்ஸோ எதுவாகினும் ரசிகர்களுக்கு டபுள் தமாகா தான்.