GQ அவார்ட்ஸில் மிக ஸ்டைலிஷாக கலந்து கொண்ட ரெஜினா கெஸன்ட்றா! மொய்க்கும் கேமரா கண்கள்! கிளிக்ஸ் வைரல்.
ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒலிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக பணிபுரிந்தார். பல குறும்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்தார். பின்னர் இப்படம் 2012 இல் அதே பெயரில் முழு நீளப்படமாக உருவாக்கப்பட்டது.
குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதிருந்தே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் ரெஜினா கெஸ்ஸன்றா. தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் தமிழில் நாயகியாக அறிமுகம் ஆனார்.
அதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சரவணன் இருக்க பயமேன் திரைப்படத்தில் நடிகர் உதயநிதியுடன் எம்புட்டு இருக்குது ஆசை என்ற இரட்டை அர்த்த வரிகள் கொண்ட பாடலில் படு கவர்ச்சியாக நடித்து இளைஞர்களை தன் பக்கம் இழுத்து விட்டார்.
ஆண்களுக்கான பிரத்யேக பத்திரிகை GQ. ஆண்களுக்கான உலகம், ஃபேஷன், மாடல், என் பல பலவகைகளிலும் ஆண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பத்திரிகை GQ . அதன் 2021 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் செம்ம ஸ்டிலிஷாக கலந்து கொண்டு ரசிகர்கள் நெஞ்சை பஞ்சாக்கியிருக்கிறார் ரெஜினா.