போதையில் தான் இருப்பாரு போலயே.. செல்வராகவன் தனுஷ் யுவன் சேர்ந்தாலே மிரட்டி விட்ருக்காங்க.. நானே வருவேன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில், யுவன் இசையில் வரும் 29ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிற படம் நானே வருவேன். படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி சக்க போடு போட்ட நிஜத்தில், படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. டீஏற்கனவே வீரா சூரா பாட்டு ரிலீஸ் ஆகி வைப் ஆகி கொண்டிருக்க, தற்போது இரண்டாவது பாடலான ரெண்டு ராஜா தனுஷ், யுவன் குரலில் ரிலீஸ் ஆகி ட்ரெண்டிங்.
‘மனிதனில் மருகம் அதிகம்தான் ,மிருகத்தின் மனிதன் அதிகம் வரிகள் செம்ம’ இது அந்த பாடலில் வரும் வரிகள். என்னடா இவ்வளவு நாளா எழுதிருக்காங்க யாரா இருக்கும் என்று பார்த்தால் இந்த பாடல் எழுதியவர் நம்ம பொயட்-u தனுஷ் தான். ஒரு ஊர்ல இரண்டு ராஜா இருந்தாராம்.. அந்த ரெண்டு ராஜா படத்தில் தனுஷா இருக்கலாம், ஆனா இசையில் ஒரேய ராஜா யுவன் ஷங்கர் ராஜா தான்.
தனுஷ் குரலுடன், யுவன் குரல் சேரும்போது வரும் அந்த சத்தம் வேற லெவல். இந்த படம் சைலண்டா சம்பவம் பண்ணும் என்று தோன்றுகிறது. அடுத்த நாளே பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆவதால் இந்த படத்திற்கு பின்னடைவு ஏற்பட்டாலும் ஆரோக்கியமான போட்டியாக தான் இருக்கப்போகிறது. அதில் சந்தேகமில்லை.
இந்த ஒரு பாடல் போதும். இந்த பாடலே கதையின் கருத்தையும், படத்தின் மீது அதிக ஆர்வத்தையும் உண்டாக்குகிறது. எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் பாடல் நினைவுக்கு வருகிறதா இந்த பாடல் கேட்டால்? கமெண்டில் பதிவிடவும்.
Video: